அபகா -கமீஸ் முஷைஎத் அல் அசீறி ஹாஸ்பிடலின் சீனியர் நீரோ சர்ஜன் டாக்டர் வேலு அவர்கள் மருத்துவ கருத்தரங்கு நிமித்தம் ஜெத்தா -சவூதி அரேபியா வந்திருந்தவர்களை நண்பர்கள் சந்தித்து உரையாடியபோது நமக்கென்று ஒரு நாளிதழ் தமிழில் வேண்டும் என்ற அவாவை வெளிப் படுத்தினார்கள்.
மலையாளிக்கு அடுத்த படியாக மிகுதமான மக்களை கொண்டுள்ள நம் சமுதாய - சமூக மக்களை பிரயோஜனமாக நெறிப் படுத்துவது என்று கோரப்பட்டது.
அரப் நியுஸ் அல்லது சவூதி கெசட் ஊடகத்துடன் நாம் கைகோர்த்து கொணர முயற்சிக்கலாம் என ஆலோசனை தெருவிக்கப் பட்டது.
ஜெத்தா தமிழ் சங்க நிர்வாகிகள் இந்தியத்தூதரகத்தில் கான்சுலேட் ஜெனரல் அவர்களைஇன்று சந்தித்தபோது இதே கருத்தினைக் கூறி,தமிழர்களின் பள்ளி ஒன்று கூடஜித்தாவில் தென்பட வில்லேயே..? என JTS ஒருங்கிணைப்பாளர் முஹம்மது ரஃபீக் அவர்களிடம் வினவ, அதற்கு பள்ளிகளின் பிரின்சிபால்களாக தமிழர்கள்தான் உள்ளனர் என்று சகோ.ரஃபியாவும் சகோ.சிராஜூம் விளக்கினர்.நிர்வகிப்பது நம்மவர்கள்தான் என சகோ.ஷஃபீக் மாலிக் கூறினார்.
மேலே உள்ள புகைப்படத்தில், ஜித்தா, சவூதி அரேபியா- பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழாவில் சவூதி ஸ்பான்சருடன் நிற்பவரும் (பிரின்சிபால்-சென்னை), பரிசுக்கோப்பையை பெரும் மாணவனும் (அதிரை/msm[a]) தமிழகத்தை சார்ந்தவர்களே.. இதை இந்நாட்டில் நாம் கண்ணுரமாத்திரமே முடியும், வாசிக்க வேண்டுமென்றால் தமிழ் நாளிதழைபற்றி இப்பொழுதே யோசிக்க வேண்டும்..
தமிழ் செம்மொழி மாநாட்டில் மார்தட்டிக்கொண்டோம் "எங்கும் தமிழ், எதிலும் தமிழ்" என்று.. ஆனால், எங்கும் வியாபித்திருப்பது என்னவோ "மலையாளமே"...
2 comments: on "தேவை ஒரு தமிழ் நாளிதழ்"
நல்ல விஷயம்தான் ..ஆனா யார் தொடங்குவதுன்னுதான் லேட்டா போய்ட்டு இருக்கு .
தமிழ்ப் பத்திரிகைத் தொடங்க வேண்டும் என்பது நல்ல செய்தியே. அதிலே ”எங்கும் வியாபித்திருப்பது என்னவோ "மலையாளமே"...” என்ற பொறாமை ஏன்? மலையாளிகளின் திறமையானவர்கள் என்பதுதான் அதன் அர்த்தம்? நாமும் செழிப்போம், மற்றவர்களையும் செழிக்க வைப்போம்.
Post a Comment
வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?