"தமிழக ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற புதிய கூட்டணி அமையுமா?" என்ற தலைப்பிட்ட இன்றைய பதினேழாம் தேதியிட்ட தினமலரில் வெளியான செய்தி என் கவனத்தைக் கவர்ந்தது.
ஒப்புதலுக்கும், நிதி ஒதுக்கீட்டிற்கும் காத்திருக்கும் தமிழக ரயில்வே திட்டங்களில் திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் திட்டம் முதல் திட்டமாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் ரயில்வே பட்ஜெட் தாக்கலாகவிருப்பதால் ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியும் அதிகாரிகளும் அதற்கான ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாகவும், எதிர்வரும் தமிழகம், புதுச்சேரி, கேரளா மற்றும் மேற்கு வங்க சட்ட சபை தேர்தல்களை கருத்தில் கொண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படலாம் என்ற கருத்து மத்திய மாநில அரசு வட்டாரங்களில் நிலவுவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மற்ற மாநில அரசியல் வாதிகளை முன்னுதாரணம் காட்டி நம்முடைய அரசியல் வாதிகளும் கட்சி பாகுபாடின்றி ஒற்றுமையுடன் செயல்பட்டால் அதிக அளவில் நிதி ஒதுக்கீடும், பெரும்பான்மையான திட்டங்களுக்கு ஒப்புதலும் பெற்றுவிடலாம் என குறிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நம் ஊர் மற்றும் அண்டை ஊர் தனவந்தர்கள், தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் செல்வாக்குடையோர் முயற்சிகள் மேற்கொண்ட நிலையில் மீண்டும் அந்த முயற்சியை முடுக்கிவிட்டு முக்கிய அமைச்சர் பெருமக்களையும் செல்வாக்குடைய எதிர்க்கட்சி பிரமுகர்களையும் உரிய முறையில் சந்தித்து முறையிட்டால் நம் நீண்ட நாள் கனவு நிச்சயம் விரைவில் நிறைவேறும் என்பது என் துணிபு.
முடிந்தோர் முயற்சிப்பார்களா?
அபு பஜ்லு (செ.ஒ.மு.ஹுசைன்)
ஜித்தா
1 comments: on "திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டம்"
thanks
Post a Comment
வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?