நான் 11வயதாக இருக்கும் போது காரைக்கால் ஹமீதிய்யா ஹாஸ்டலில் அச்சகோதரர் எனக்கு அறிமுகமானார், என்னுடைய பெற்றோர்கள் ஹாஸ்டலில் சேர்க்கும்போது இச்ச்கோதரரிடமும் இன்னொரு சகோவிடமும் தான் பொறுப்பை ஒப்படைத்து சென்றார்கள்.அன்றிலிருந்து இன்றுவரை அவரிடமிருந்து நிறைய அறிவுரைகளை கேட்டு பயன் அடைந்திருக்கிறேன், இறைவனுக்கே எல்லா புகழும்.
அச்சகோதரரின் இணையப்பங்களிப்பு அளவிடமுடியாதவை , இந்த வலைப்பூக்கள்(பிளாக்ஸ்பாட்) வருமுன்னரே அதிரை மக்களுக்காக அவருடைய இனைய சேவையை செய்து வருகிறார்.
மேலும் அவரைப்பற்றி விபரங்களை அறிய கூகுளில் mahir78 என்று தேடி பாருங்கள்.
இக்கட்டுரையை பதிந்ததின் நோக்கம் நம் இளைஞர்களை இது போன்ற சேவைகளை ஊக்கப் படுத்துவதற்காகத்தான், மேலும் அவரைப்பற்றி செய்தியை தட்ஸ்தமிழில் படித்தேன்,
"சென்னை: இன்டர்நெட் கலைக் களஞ்சியமான விக்கிபீடியா ஆரம்பிக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி சென்னையில் சிறப்பு ஆய்வரங்கத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரும் 15ம் தேதி குரோம்பேட்டையில் சென்னை தொழில்நுட்ப நிறுவனத்தில் (Madras Institute of Technology) மாலை 3 மணிக்கு இக் கூட்டம் நடக்கிறது.
இதில் ஆங்கில விக்கிப்பீடியா குறித்தும், பத்தாண்டு நிறைவு விழா குறித்து 'விக்கியர்' ஒருவர் பேசுவார். மாகிர், பரிதிமதி ஆகியோர் தமிழ் விக்கிப்பீடியா, விக்கி செய்திகள் குறித்துப் பேசுவார்.
தமிழ் விக்கிப்பீடியாவின் சிறந்த விக்கிப் பயனர்கள், அவர்களின் பங்களிப்புகள் குறித்து விவாதிக்கப்படும்.
இதையடுத்து பொதுவான உரையாடல்கள் நடக்கும்.
பின்னர் தேனி சுப்பிரமணி எழுதிய தமிழ் விக்கிப்பீடியா நூல் வெளியிடப்படும்.
இதைத் தொடர்ந்து ஜிம்மி வேல்சுடன் ஒர் இணைய உரையாடல் நடத்தவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது."
நன்றி தட்ஸ்தமிழ்
1 comments: on "சென்னையில் விக்கிப்பீடியா பத்தாம் ஆண்டு விழா - சகோ.மாகிரின் பங்களிப்பு"
அஸ்ஸலாமு அலைக்கும்,
தம்பி மன்சூர் தங்களின் கருத்துப் பதிவுடன் நானும் உடன்படுகிறேன். தமிழ் விக்கீபீடியாவில் சகோதரர் மாஹிரின் பங்கை குறைந்தபட்சமாவது அறிந்தவர்களில் நானும் ஒருவன்.
இணையக்கடலில், குறிப்பாக தமிழ் விக்கீபீடியாவில் நம்மவரின் பங்கு அதிகம் இருப்பது நமக்கு எல்லாம் பெருமை என்றால் மிகயில்லை. விக்கீ செய்தி குறித்து சகோதரர் மாஹிரின் உரையை மிக ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறேன்.
சகோதரர் மாஹிருக்கு வாழ்த்துக்கள்.
Post a Comment
வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?