Thursday, June 17, 2010

மற்றவர்களை அறியும் அறிவு


உலகக்கல்விகளில் உயர்ந்தவற்றுள் நான் அதிகம் ஆச்சர்யப்படுவது "மற்றவர்களை அறியும் அறிவு" [Character Study] இது பற்றி பல நூற்றாண்டுகளுக்கு முன்னே முஸ்லிம்கள் எனொக்ராம்[ENOGRAM] என்ற ஒரு சூப்பர் சமாச்சாரத்தை உலகுக்கு தந்து இருக்கிறார்கள்.

வழக்கம்போல் முஸ்லிகள் ஒற்றுமை இல்லாததால் இந்த உயர்கல்வியை மங்கோலியாவில் கோட்டைவிட்டு
[ அல்லது மற்றவர்களால் 'லவட்டப்பட்டு'] சமீபத்திய நூற்றாண்டில் க்ருட்ஜேவ் [GRUDJEVE] என்ற ரஷ்ய ஞானியால் அறிமுகம் ஆகியிருக்கிறது.
.
கயவனை அறியாமல் நடப்பதும் ஒருவித தூக்கநிலைதான்.
மனத்தின் செயல்பாடு அறிந்தவற்றிலிருந்து இயங்கும்.
சமயங்களில் நல்ல நண்பனாக பழககூடியவர்கள் கூட "ரூம் மேட்' ஆக முடியாது.
மாறிவரும் காலத்தை மனது ஏற்றுக்கொள்வதில்லை
இவர்களால் எப்படித்தான் இப்படி நடக்க / பேச முடிகிறதோ தெரியவில்லை. சிலரின் வேடிக்கையான நடத்தையை இங்குபார்க்கலாம்;
1. இருவர் பேசிக்கொண்டிருக்கும்போது மற்றவர் [மூன்றாமவர்] இடையில் பேச முற்படும்போது “Excuse Me” சொல்வதெல்லாம் ஏதோ தேசக்குற்றம் மாதிரி யாரும் செய்வதில்லை.
2. பெண்கள் இருக்கும் இடத்தில் சத்தமாக பேசுவது [ இவர் இருக்கிறார் என தெரியனுமாம் ] ஆனால் இப்போது உள்ள பெண்களால் இவன் ஒரு காமெடிபீஸா அல்லது வெவரமான பார்ட்டியா என இவன் போட்டிருக்கும் உடுப்பை வைத்தே சொல்லிவிடமுடியும் என்பது இது போன்ற பார்ட்டிகளுக்கு தெரியாது.

    3. இவர்கள் நாம் பேசி முடிக்குமுன் தீர்ப்பு சொல்லிவிடுவார்கள்;  செய்தியை முழுமையாக கேட்க்கும் சர்க்யுட் இவர்களிடம் "பூசனம்" பூத்திருக்களாம்.

இளைஞர்கள் யாராவது புதிதாக தொழில் ஆரம்பிக்க கீழ்க்கண்ட வசனம் பேசுபவர்கள் பக்கதில் கூட நிற்க்கவேண்டாம்:
1. "என்னதான் எண்ணையை தேச்சிகிட்டு பெரண்டாலும் ஒட்டுற மண்ணௌதான் ஒட்டும்"
2. "தொடர்ந்தாப்லெ ஒருத்தன் பணக்காரணாக இருக்க முடியாது"
3. "பணம் ஒரு பேய்"பணம் வந்தால் வாழ்க்கையில் நிம்மதி போய்விடும்:
இதுபோன்ற பழமோழியை கண்டுபிடித்தவன் தான் கையிலே சிக்கமாட்டுக்கிறான்
மற்றும் சில கேரக்டர்கள்
1. யாரையும் முகத்துக்குமுன் புகழ்வது / அவன் போன பிறகு வைவது
2. நண்பர்களிடம் பேசும்பொது பில்கேட் ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து, மெயின்ரோடு/கடைதெருவில் செலவழிக்கும் போது அனியாயத்துக்கு பம்முவது.
3. தொடர்ந்தாப்லெ பல வருசம் "விசா வருது"னு வாய்கூசாமெ பொய்சொல்றது.
4. சொல்லிவைத்தமாதிரி 3, 4 பேருக்கு ஒரே நேரத்தில் அப்பாயின்ட்மென்ட் கொடுத்து எதையும் சரியான நேரத்தில் செய்யாமல் தன்னை தவிர எல்லாரையும்/எல்லாவிசயங்களையும் காரணமாக சொல்வது
5. சின்னபிள்ளைகளுக்கு கொடுக்காமல் [அல்லது பார்க்கவைத்து] தீனியை நாகரிகம் இல்லாமல் [ஒலப்பி] சாப்பிடுவது.
6. சமயங்களில் நமது பலவீனத்தை பயன்படுத்தி நம்மிடமே பணம் வாங்கியவர்கள் கொஞ்சம் நாள் பார்க்காவிட்டால் , திடீரென்று பார்க்கும் சூழ்நிலை ஏற்படும் போது போடும் டிராமா எல்லா சீரியலையும் வென்றுவிடும்.இதே வெளிநாட்டில் சம்பாதிப்பவர்கள் பணம் பெரும்பாலும் காந்திகணக்குதான்.
தெரிந்தவர்கள் இன்னும் எழுதவும் ....இதுவும் ஒரு “மற்றவர்களை அறியும் அறிவு” தானே!!
ZAKIR HUSSAIN
read more...

Sunday, June 13, 2010

படித்தேன் பகிர்ந்தேன் - சிறந்த சான்றிதழ் படிப்புகள் !

வேலைக்கான சிறந்த 10 ஐ.டி., சான்றிதழ் படிப்புகள் எவை...

ஐ.டி., துறை தொடர்புடைய ஒரு புதிய வேலையையோ, அல்லது வகிக்கும் பதவியில் ஒரு உயர்வையோ பெறுவதற்கு ஐ.டி., துறை தொடர்புடைய சான்றிதழ் படிப்புகள் பெரிதும் உதவி புரிகின்றன.
இன்றைய உலகம் சர்வ தேசப் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் இந்த நாட்களில் பொருளாதாரம் நல்ல வளர்ச்சி அடைந்து வருவதோடு, ஐ.டி., துறையும் இழந்த பெருமையை மீண்டும் பெறும் நிலைக்கு முன்னேறி வருகிறது. இந்த மாற்றங்களின் அடிப்படையில் எந்தெந்த ஐ.டி., சான்றிதழ் படிப்புகளுக்கு இனி வரும் நாட்களில் நல்ல மதிப்பிருக்கும் என்ற ஒரு ஆராய்ச்சியை பூட் பார்ட்னர்ஸ் என்ற தொழில் ஆய்வு நிறுவனம் நடத்தியது. அந்த ஆராய்ச்சியில் அடையாளம் காணப்பட்ட முதல் 10 படிப்புகள் இவைதான் :


வி.எம்.வேர் சர்டிபைடு புரோபஷனல் : தற்போது வர்ச்சுவலைசேஷன் டெக்னாலஜிக்கு தேவை அதிகரித்து வருகிறது. எனவே வி.சி.பி., என்ற வி.எம்.வேர் சர்டிபைடு புரோபஷனல்களுக்கான தேவையும் அதிகரிக்கிறது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் வி.சி.பி.,களுக்கு அதிக தேவை இருப்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளதால் இந்தப் படிப்பு முதலிடத்தைப் பெறுகிறது.


சர்டிபைடு இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் ஆடிட்டர் : தகவல் தொழில் நுட்ப ஆடிட்டிங் பிரிவில் ஐ.எஸ்.ஏ.சி.ஏ., என்ற அமைப்பின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சி.ஐ.எஸ்.ஏ., என்ற சர்டிபைடு இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் ஆடிட்டர் சான்றிதழ் படிப்பு முன்னிலை வகிக்கிறது. இருந்த போதும் இந்த சான்றிதழைப் பெற ஐ.எஸ்.ஏ.சி.ஏ., அமைப்பு வகுத்துள்ள நிர்ப்பந்தங்களை முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.

ஜி.ஐ.ஏ.சி., செக்யூரிட்டி ஆடிட் எசன்சியல்ஸ் : ஒரு நிறுவனத்தின் திட்டம், செயல்முறை, ஆபத்துக்கள் போன்ற நிறுவனம் தொடர்புடைய தகவல் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த சான்றிதழ் படிப்பாகும் இது. இந்தப் பிரிவில் ஆர்வம் கொண்டவர்கள் இந்தப் படிப்பைப் படிக்கலாம்.

சர்டிபைடு இன்பர்மேஷன் செக்யூரிட்டி மேனேஜர் : ஐ.எஸ்.ஏ.சி.ஏ., அமைப்பினால் தகவல் பாதுகாப்பு மேலாளர்களுக்கு வழங்கப்படும் சி.எஸ்.ஐ.எம்., சான்றிதழ் படிப்பாகும் இது.

பாயிண்ட் சர்டிபைடு செக்யூரிட்டி எக்ஸ்பர்ட் : ஐ.டி., தகவல் பாதுகாப்புத் துறையில் அனுபவம் கொண்ட தொழில் நுட்ப அறிவு படைத்தவர்களுக்காக சி.சி.எஸ்.இ., என்ற சான்றிதழ் படிப்பு வழங்கப்படுகிறது. இந்தப் படிப்பு முழுக்க நுகர்வோரின் தேவைகளை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது சிறப்பாகும். இதனைப் படிப்பதன் மூலம் முழுமையான தகவல் பாதுகாப்பு குறித்த திறன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

பாயின்ட் சர்டிபைடு செக்யூரிட்டி அட்மினிஸ்டிரேடர் : இதுவும் பாயின்ட் சர்டிபிகேஷனில் மற்றொரு படிப்பாகும். சி.சி.எஸ்.ஏ., என்ற இந்தப் படிப்பில் உபயோகிப்பாளரின் அன்றாட பாதுகாப்பு, வலையமைப்பில் தகவல்கள் சிதறாமலிருப்பதற்கான வழிமுறைகள் ஆகியவற்றைப் பற்றி பாடப் பகுதிகள் இருக்கும்.

மைக்ரோசாப்ட் சர்டிபைடு சிஸ்டம்ஸ் என்ஜினியர்(செக்யூரிட்டி) : எம்.சி.எஸ்.இ., என்ற இந்த சான்றிதழ் படிப்பை மேற்கொள்வதன் மூலம் வடிவமைத்தல், செயல்படுத்துதல், உள்கட்டமைப்பு நிர்வாகம் ஆகிய பகுதிகளில் ஒரு தனி நபரின் திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும். வியாபாரத் தேவைகளை நிறைவேற்ற விண்டோஸ் 2003 மற்றும் விண்டோஸ் 2000 சர்வர்களை உபயோகிக்கும் நிறுவனங்களுக்கு இது முற்றிலும் பொருந்தும்.

சர்டிபைடு வயர்லெஸ் செக்யூரிட்டி புரபஷனல் : ஒயர்லெஸ் நெட் வொர்க்குகளைப் பெற உதவிடும் விதத்தில் வழங்கப்படும் மிக ஆழமான சான்றிதழ் படிப்பாக சி.டபிள்யூ.எஸ்.பி., படிப்பு இருக்கிறது. இந்தப் படிப்பில் 802.11 வயர்லெஸ் லான் டெக்னாலஜி குறித்த ஆழமான பாடப் பகுதிகள் இருக்கும்.

ஜி.ஐ.ஏ.சி., சர்டிபைடு இண்ட்ரூஷன் அனலிஸ்ட் : ஜி.சி.ஐ.ஏ., என்ற இந்தப் படிப்பும் தகவல் பாதுகாப்பு குறித்த ஒன்றுதான். இதில் தொழில் நுட்ப ரீதியான மற்றும் செயல்முறையுடன் கூடிய சிறப்பு அணுகுமுறைகள் உண்டு. இந்தப் படிப்பை சான்ஸ் என்ற கல்வி நிறுவனம் 1999 முதல் நடத்தி வருகிறது.

சிஸ்கோ சர்டிபைடு நெட்வொர்க் புரபஷனல் : சி.சி.என்.பி., என்ற இந்தப் படிப்பை சிஸ்கோ நிறுவனம் நடத்துகிறது. இதுவும் உபயோகிப்பாளரின் தேவைக்கேற்ப வடிவமைக்கப்பட்டதுதான். இந்தப் படிப்பில் லோகல் ஏரியா நெட் வொர்க்கில் திட்டமிடுதல், செயல்படுத்துதல், சோதனை செய்தல், பிரச்னைகளைக் கையாளுதல்,திறனாளர்களுடன் இணைந்து பாதுகாப்பு, ஒலி, வயர்லெஸ், மற்றும் வீடியோ தொழில் நுட்பம் போன்றவற்றில் பணியாற்றுதல் ஆகியவை கையாளப்படுகிறது. 


அதிரை - சர்புதீன்
read more...

Friday, June 11, 2010

எச்சரிக்கை , எச்சரிக்கை, எச்சரிக்கை!

என்ன சகோதர, சகோதரிகளே, தலைப்பு ஒரு மார்க்கமா இருக்கென்று பார்கிறீங்களா, இந்த தலைப்பில் கட்டுரை எழுத நான் கட்டாயமாக்கப் பட்டு விட்டேன். ஆம், இன்று(10/06/10) எனக்கு நடந்த சம்ப்வத்திலிருந்து நான் கற்று கொண்ட பாடமும், இதனால்  நீங்கள் அடைந்து கொள்ள வேண்டிய உஷாரை பற்றி தான் இந்த சின்ன கட்டுரை. சரி விசயத்திற்கு வருவோம்.


ஆம், இன்று அலுவலகத்தை முடித்து கொண்டு பேருந்திற்காக காத்திருந்த பொழுது டாக்ஸி ஒன்று வந்து நின்று ரியலின் ! ரியலின்(2 ரியால்) கூறியவுடன் சரி டாக்ஸியில் போய்விடுவோம் என்று ஏறி விட்டேன், பொதுவாக தனியார் டாக்ஸியில் தான் ஆபத்து என்று கேள்வி பட்டதுண்டு, ஆனால் முறையாக ரிஜிஸ்தர் செய்து ஓடும் டாக்ஸியிலும் ஆபத்திருப்பதை அப்பொழுது தான் தெரிந்து கொண்டேன். என்னுடன் சேர்த்து மொத்தம் அந்த டாக்ஸியில் மூன்று பேர், கொஞ்ச தூரம் போன பிறகு, எனக்கு பக்கத்திலிருந்தவன் திடீரென குனிந்து 500 ரியால் நோட்டு கட்டு ஒன்றை எடுத்து விட்டு யாரிடமும் சொல்லிவிடாதேன்னு சொன்னவுடன், எனக்கு தூக்கி வாரி போட்டது, ஆஹா வரக்கூடாத டாக்ஸில வந்துட்டோமான்னு, நினைத்து கொண்டிருக்கும் போது முன் சீட்டில் உள்ளவன் இறங்குவதற்காக டாக்ஸியை  நிறுத்தியவுடன், அப்பாட இங்கேயா நாமும் இறங்கிவிடலாம் என்று முயன்ற பொழுது முன் சீட்டிலிருந்து இறங்கி சென்றவன் திடீரென்று வந்து அழுது கொண்டு என்னுடைய பணத்தை பார்த்தாயா, அதில் நிறைய பணமிருந்தது என்று அழுது கேட்டவுடன், ஆஹா இவனை பார்த்தல் பாவமாக இருக்கிறதே சொல்லிடுவோம்னு, அதோ அவன்தான் எடுத்தான் என்று சொன்னேன், பணத்தை தொலைத்தவன் எனக்கு பக்கதிலிருந்தவனிடம் வேலட்டை செக் பண்ணுவதற்காக கேட்டவுடன் அவனும் கொடுத்துவிட்டான், பிறகு என்னுடைய வேலட்டை வாங்கி செக் பண்ணினான். என்னுடைய வேலட்டை வாங்கி செக் பண்ணும்போது பணத்தை எப்படித்தான் எடுத்தான் என்று தெரியவில்லை. நானும் கவனிக்க வில்லை டாக்ஸியிலேந்து  இறங்கி விட்டு அவனை போலீசிடம் போய் ஒப்படை என்று சொல்லி அனுப்பி விட்டு, அப்பட என்று பெருமூச்சு விட்டுவிட்டு, சரி வேற நல்ல டாக்ஸியை பிடித்துகொண்டு போகாலாமென வேலட்டை பார்த்தாபோது தான் தெரிந்தது அவனும் திருட்டு கும்பலில் ஒருவன் என்று, அப்படியே பேய் அறைந்தவன் போல் அங்கேயே உட்கார்ந்துவிட்டேன், வேறென்ன செய்வது, போனது  போனது தான், ஆகையால்

நான் உங்களுக்கு சொல்ல வருவது:
   1. டாக்ஸியில் செல்ல முற்பட்டால், முடிந்தவரை தனியாக செல்லவும்.
   2. முடிந்தவரை சொந்த நாட்டு ஒட்டுனரை தவிர்த்து விடுங்கள்,
   3. முடிந்தவரை ஏறும்முன் வண்டி நம்பரை குறித்து விட்டு ஏறவும்,
   4. டாக்ஸிகென ஆறெழுத்து இலக்க எண் இருக்கும், அவை 700 லோ அல்லது 900 லோ ஆரம்பித்தால் முடிந்தவரை தவிர்த்து விடுங்கள், ஏனெனில் அப்படி ஆரம்பிக்கும் எண்கள் சொந்த நாட்டு ஓட்டுனர் வைத்திருக்கும் டாக்ஸி ஆகும்.
   5 இதுபோன்று எவரேனும் பணத்தை கீழிருந்து எடுத்தால் சற்றும் யோசிக்காமல் டாக்ஸியை நிறுத்த சொல்லி விட்டு இறங்கி விடுங்கள்
   6. இந்த மாதிரி திருட்டு வேளையில் ஈடுபடுவது பெரும்பாலும், கருப்பு இனத்தவர்களாக தான் இருக்கிறார்கள், ஆகையால் மேல் சொன்ன விசயங்களை மனதிற்கொண்டு உஷாராக இருந்து கொள்ளுங்கள்
  
நான் கற்று கொண்ட பாடம்:
  1. ஏறுமுன் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருந்தால் ஏறக்கூடாது.
  2. ஓட்டுனர் வெளிநாட்டவராக இருந்தால் மட்டும் ஏற வேண்டும்
  3. டாக்ஸியில் போக வேண்டுமென முடிவெடுத்தால், பணம், ID கார்டு இவற்றை வேலட்டிளிருந்து எடுத்து வேறு பாக்கெட்டில் வைத்தால் நல்லது .
  4. எது எப்படியானாலும் முடிந்தவரை பேருந்தில் செல்வது நல்லது
மேற் சொன்ன விஷயங்கள் உங்களுக்கு தெரியாதவை அல்ல, எனக்கு சில முன் எச்சரிக்கைகளை சொல்ல வேண்டுமென தோன்றியது.இதை விட எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டுமென உங்களுக்கும் தெரியும், இதில் குறிப்பிடாத விசயங்களை நீங்கள் பின்னோடமிட்டால் நானும் தெரிந்து கொள்வேன்
read more...

Friday, May 28, 2010

தன்னிலை சுகாதாரம்


தன்னிலை சுகாதாரம் [Personal Hygiene]...

இதை எழுத காரணமாக இருந்த சூழ்நிலை இப்போது ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழியும் சூழ்நிழைதான்,

' உலகத்தில் இருக்கும் மதம் / மார்க்கங்களில் அதிகம் சுத்தம் சம்பந்தமாக முக்கியத்துவம் கொடுத்த ஒரே மார்க்கம் இஸ்லாம் தான், துரதிஸ்ட்டவசமாக் அதன் விழிப்புணர்வுகள் முஸ்லீம்களிடம் சரியாக போய்சேரவில்லையோ என நினைக்க தோனுகிறது....இது ஒரு முறை டாக்டர் K.V.S ஹபீப் முகமது சொன்னார் [ இவர் இஸ்லாமிய அறிஞரும் ஆவார்.]
அது முன்பு இருக்கலாம் இப்போது மாறிவிட்டது என நினைப்பவர்களுக்கு....

# எப்படி பப்ளிக் டாய்லெட்களில் அடிக்கும் ஒருவிதமான அமோனியா வாடை மூச்சுதினறவைக்கிறது

# தன் பல்லை சுற்றி கேரளாவில் உள்ள அரண்மணை சுவர்கள் மாதிரி பாசிபடிய விட்டு எப்படி சிலபேரால் பொதுவில் நடமாட முடிகிறது.
இதற்க்கும் மக்கள் தொகைதான் காரணமா????....எப்படி இதே மக்கள் தொகை [ஆட்கள்] பயன்படுத்தும் டாய்லெட் வெளிநாடுகளில் சுத்தமாக இருக்கிறது.

அவர்களுக்கு எல்லாம் மற்றவர்களை பற்றி கவலை இருக்கிறது. நம்மிடம் அது இல்லை
,

இருந்தால் வீட்டுவாசலில் ஏன் ஒவ்வொறு நாளும் ஒடும் சாக்கடையில் லாங் ஜம்ப் தாண்டுகிறோம்.
காலையிலும் இரவிலும் பல் தேய்க்க சொல்வது பள்ளிக்கூட படிப்பு. இது என்னவோ எக்ஸாமுக்கு உள்ள விசயம் மாதிரி நிரைய பேர் அந்த வருசத்து புத்தகத்தை பாதி விலைக்கு போட்ட அதே மூட்டையில் கட்டி அனுப்பி விட்டார்கள்./ வாங்கியவனும் பயன்படுத்த வில்லை என்று சகோ; சாகுல் ஹமீது தமாமிலிருந்து பின்னூட்டமிடலாம்.

இதற்கெல்லாம் அரைமணித்தியாலத்தில் பாலிசிங் ட்ரில்லர்/வாக்யும் வைத்து சுத்தபடுத்த பல்டாகடர்கள் வந்துவிட்டார்கள் கேட்டால்..."நேரமில்லை' நு SMS மாதிரி சொல்லிடுவானுக. இன்னும் செளசால்யம் [Toilet] இல்லாத வீடுகள் நமது ஊரில் இருக்கிரது என நினைக்கிறேன் , .காரணம் = வசதியில்லை..அதெ வீட்டில் உள்ள்வர்கள் எப்படி லட்சகணக்கில் பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்ப பணம் புரட்டிகிறார்கள் என்ப்து 'பிடிவாதக்கொடுமை'
பக்கத்தில் ஆட்கள் இருக்கும்போது வாயில் கர்சீப் / அல்லது முடிந்தால் தூரம் போய் தும்மும் பணிவன்பு நிறைய பேரிடம் இல்லை. இது போன்ற கற்கால பழக்க வழக்கங்களால் Epidamic Disease பரவுகிறது என மருத்துவ துறையினர் தொடர்ந்து வழியுருத்திவருகிறார்கள்.இந்த லட்சனத்தில் 'பன்றிக்காய்ச்சல் பாய்மாருஙகளுக்கு வ்ராது' என ஒருவர் [ "பாய்"தான்] இனையயத்தில் எழுதியிருந்தார்...[ உன் அறிவியல் அறிவில் கொள்ளி வைக்க!!]

இன்னும் சிலர் ஜுரம் / தடுமலுக்கு டாக்டரிடம் போகும் போது ஏதோ எல்லாம் இழந்து விட்ட மாதிரி போவது [ அப்பதான் நல்ல ஊசி/மாத்திரை தருவார்!!] கொஞ்சம் பல் தேய்த்து , வாய் கொப்பளித்து , முகம் கழுவி போனால்தான் என்ன .

இவர்கள் வாய்திறந்து பேசி அந்த மயக்கத்தில் டாக்டருக்கு ஆம்புலன்ஸ் தேவைப்படும் அளவுக்கு
போய்விடலாம் அல்லவா?
சிகரட் / வெத்திலை / சுருட்டு உபயோகிப்பவர்களை திருமணம் செய்த பெண்களுக்கு 'அமைதிக்கான நோபல் பரிசு' கொடுக்கலாமா என அதிரை எக்ஸ்பிரஸ் ஒரு இன்டெர்னெட் தேர்தல் தாராளமாக நடத்தலாம்.மலேசியாவின் இஸ்லாமியத்துறை சிகரட் ஒரு ஹ்ராமான வஸ்த்து என அறிவித்து சில வருடங்கள் ஆகிவிட்டது.

காரில் போகும்போது தும்மும்போது கவனமாக இருங்கள், உங்களிடமிருந்து வெளியாகும் பாக்டிரியா 30 நிமிடத்துக்கு உயிர்வாழமுடியும். [ கார் கண்ணாடி திறந்திருப்பது நல்லது.] அப்படி யாரும் தும்மிவிட்டால் உடனே கண்டித்து விடாதீர்கள்..சிலருக்கு நாக்கில் சனியன் AC ரூம் போட்டுதங்கியிருக்கும்.
Personal Hygiene பற்றி எழுத நிறையவிசயம் இருக்கிறது.

ZAKIR HUSSAIN


read more...

Tuesday, May 25, 2010

இதையும் தெரிஞ்சிக்குவோமே!

  என்ன அப்படி பார்க்கிறீங்க  படத்தை, உங்களுக்கு கணிக்க முடிகிறதா என்ன சொல்ல வரபோகிறேனென்று ,  எப்பொழுதெல்லாம் மக்காவுக்கு செல்வேனோ அப்பொழுதெல்லாம் இந்த சுவரசியமான விஷயத்தை பற்றி எழுதினால் என்ன? என தோன்றும் ஆனால் இந்த வாரம் தான்  அதற்கு சரியான நேரம் கிடைத்தது. 
சரி விஷயத்திற்கு வருவோம், இந்த படம் 18 ஆம் தேதி, ஏப்ரல் 2010 அன்று எடுக்க பட்டது, இந்த படத்தில் மக்கா மற்றும் அதனுடைய சுற்று வட்டாரத்தில் உயரமான கட்டடங்களை பார்க்கலாம், ஆனால் இவைகள் இன்னும் கட்டி முடிக்க படவில்லை, இதில் என்ன சுவரசியமான விஷயமென கேட்கிறீர்களா?, இந்த உயரமான ஹோட்டல்கள் கட்ட துவங்க முன் இங்கு ஒரு பெரிய மலை ஒன்றிருந்தது ஆனால் இப்பொழுது அதற்கான சுவடே தெரியவில்லை, எங்கு பார்த்தாலும்  கட்டடங்கள் அருமையான கட்டட கலையுடன் கட்டப்பட்டு கொண்டிருக்கிறது, இவைகளை கட்டிமுடிக்க அவர்களால் எடுக்கப் பட்ட அவகாசம் தான் நீங்கள் மேலே பார்க்கும் எண்(266), இந்த எண் ஒவ்வொரு நாளும் குறைந்து கொண்டே போகும், இதைப் பற்றி விசாரித்த பொழுது எனக்கு சில தகவல் கிடைத்தது, இது பணியாளர்களை விரைவாக வேலை செய்ய சைக்காலிஜிக்கல் அப்ரோச்சாம்.(இப்படியும் வேலை வாங்கலாமா)

இதற்கு பக்கத்தில் ஒரு பெரிய மணிகூண்டு ஒன்றும் கட்டி கொண்டிருக்கிறர்கள், இது தான் உலகிலேயே பெரிய மணி கூண்டாம் , இதன் மொத்த உயரம் 380 அடியாம். இவைகளை பற்றி நான் சொல்லுவதை விட இங்கு சொடுக்கி பாருங்களேன்.   
 அடுத்து.... 
இறைவன் நாடினால் அடுத்த இடுக்கையிலிருந்து  என்னுடைய பழைய தொடரை (தெரிஞ்சிக்கலாம), ஆரம்பிக்கலாமென உள்ளேன், வேலையின் நிமித்தமாக தொடர்ந்து எழுத முடியவில்லை.
read more...

Monday, May 3, 2010

அதிரை உமர்தம்பிக்கு அங்கீகாரம் கிடைக்குமா?

உமர்தம்பி அவர்களுக்கு உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் அங்கீகாரம் கிடைக்க ஒலி வடிவில் ஒரு வேண்டுகோள்.

இந்த செந்தமிழ் வேண்டுகோள் ஒலியை கேளுங்கள்,  நம் அதிரை உமர்தம்பி அவர்கள் எவ்வித சாதனைகள் செய்தார்கள், எவ்வகையில் கணினி தமிழுக்காக சேவை செய்தார்கள் என்பதை அழகான செந்தமிழ் நடையில் மிகத் தெளிவாக ஒலியாக்கம் செய்யப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை பதியுங்கள்.

இந்த வேண்டுகோள் ஒலியை உங்களின் வலைப்பூவிலும் பதியாலாம், இதற்கான அனுமதி இங்கே அனைத்துலக தமிழார்வலர்களுக்கு தருகிறேன்.
 

தொடர்புக்கு tjdn77@gmail.com

இதை எழுதி, ஒலியாக்கம் செய்து, நம்மை வெளியிட அனுமதியளித்த  என் அருமை நண்பர் K.H.M.ஸதகத்துல்லாஹ்வுக்கு மிக்க நன்றி, மற்றும் தமிழார்வ நண்பர்களுக்கும் நன்றி.
read more...

Saturday, May 1, 2010

தலைப்பு இல்லாமலும் படிக்கலாம்


தலைப்பு இல்லாமலும் படிக்கலாம்....

இப்போது பள்ளிபடிப்பு முடிந்து என்னபடிக்கலாம் என பசங்க குழப்பத்திலும் / தெளிவிலும் இருக்கலாம். இதில் வீட்டில் பெரியவ்ர்களின் பங்கு மிக முக்கியம்.நான் "சம்பாதிக்கவே நேரம் சரியாக இருக்கிறது..இதிலெ இவன் படிக்கிறானா இல்லையா என்பதையெல்லாம் பார்க்க முடியாது" என அடம் பிடித்தால் ஒரு இலக்கு இல்லாத சந்ததியினரை உருவாக்குகிறீர்கள என சரித்திரம் / பூகோளம் எல்லாம் உங்களை வைய்யும்.

பசங்க இப்போது 'மார்க்கெட் நிலவரம்' தெரியாமல் 'பெருவாதிபேர்' படிக்கிறார்கள். [இராலில் மண்ணைக்கலந்து விற்க்கும் நம் ஊர் கடைத்தெருவுவுக்கும் நான் சொல்லும் மார்க்கெட்டுக்கும் சம்பந்தம் இல்லை] என் மச்சான் படிக்கிறான் / தெரு பையன் படிக்கிறான் என்று விலை போகாத படிப்புகள் / பட்டங்களில் நமது மாணவர்கள் ரொம்ப ஜல்லியடிக்கிறார்கள்.

"எஸ்கிமோட்டெ யான் தம்பி ஐஸ்கிரீம் விக்கனும்?"-
அனுபவமிக்க ஒரு பெரியவர்- முத்துப்பேட்டையை சார்ந்தவர்.

இப்படித்தான் ஒருவன் ஜவுளிகடை திறந்தால் இன்னொருவனும் அதையே திறப்பது, நகை கடை திறந்தாலும் பக்கத்திலேயே அதே மாதிரி திறந்து நாசமாக போவது என அதே தவறை திருப்பி திருப்பி செய்து கொண்டிருகிறோம்.

சரி உறுப்படியாக என்ன செய்யலாம்..இப்போது Educational Fair தமிழ்நாட்டிலும் வர ஆரம்பித்து விட்டது.இதற்க்கு முன்னோடியாக இருந்தது சிங்கப்பூர் / மலேசியா / யுனைடெட் கிங்டம் போன்ற நாடுகள். சமீபத்தில் திருச்சி / சென்னையில் நடந்தது என நினைக்கிறேன். இதுபோன்ற இடங்களுக்கு உங்களக்கு தெரிந்த / தெரியாத யாரை வேண்டுமானாலும் அழைத்து செல்லலாம். வருங்காலத்தில் அந்த பையன் 'கல்வி கண் திறந்த மாமனிதர்' பட்டம் உங்களுக்கும் தரலாம்.

பசங்களிடம் " அந்த காலத்து SSLC இந்த காலத்து M.A & M.Sc க்கு சமம் தெரியுமா?' என்று பன்ச் டயலாக் எல்லாம் பேச வேண்டாம். நீங்கள் அப்போது படித்த செலபஸ் இப்போது உள்ள பல்கலைகழகங்களின் காம்பவுன்டை தாண்ட கூட பத்தாது.

ஏவியேஷன் இன்டஸ்ட்ரி இப்போது மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்து இருக்கிறது. Aircraft Engineerss & Aeronatical Engineers / தேவைகள் அதிகம். பெட்ரோலியம் இன்டஸ்ட்ரியின் வளர்ச்சி Petrolium Exploration Engineer தேவையை அதிகப்படுத்தி இருக்கிறது. மருத்துவம் சார்ந்த துறைகளில் மிகப்பெரிய முன்னேற்றம் & Stem Cell Reserach நிறைய நல்ல எதிர்காலத்தை உறுதியளிக்கிறது. Air Force Cadet Engineer சேர்ந்த்தால் அப்பாயின்ட்மென்ட் வரை Air Force செலவு செய்கிறது.
வளர்ந்து வரும் Financial Sector இப்போது உலகளாவிய ரீதியில் Financial analyst & Actuary க்கு பணம் அள்ளித்தருகிறது.

நன்றாக சம்பாதித்து வெளிநாட்டு சென்ட் எல்லாம் பர்மா பஜாரில் வாங்கிக்கலாம்.

இதற்கெல்லாம் நிறைய வெப் லின்க் இருக்கிறது. கொஞ்சம் நேரம் செலவு செய்து ரிசேர்ச் செய்ய வேண்டும்.

உயர்கல்வி தொடர நினைக்கும் மாணவர்கள் தயவு செய்து மண்ணடி தான்டாத காக்கா , புளிய மரத்தில், ரயிலடியில் உட்கார்ந்து சவடால் விடும் ஆட்களிடம் ஐடியா கேட்க வேண்டாம்.

19 - 25 வாழ்க்கையின் இலக்கை சரியாக நிர்ணயம் செய்யும் வயது. அப்போது போய் பசங்களுக்கு பொண்ணு பேசி அவனுக்கு மனதுக்குள் மத்தாப்பு வர வைத்து படிப்பில் கவனம் செலுத்த விடாமல் [நம் ஊர் பெண்களும்] அவனுக்கு பசியார செய்து தருகிறேன் / பனியான் சுட்டு தருகிறேன் என சொல்லி அவனை மொத்தமாக ஓய்த்துவிடும் டெக்னிக் இதுவரை எனக்கு புரியாத புதிர்.

உயர்கல்வி ஒன்றே சமுதாய உயர்வுக்கு முக்கியம்.

விடுங்க........ அவய்ங்க படிக்கட்டும்

ZAKIR HUSSAIN
read more...

Friday, April 9, 2010

விஞ்ஞான உறவு


விஞ்ஞான உறவு

சமீபத்தில் அதிரை எக்ஸ்பிரஸ்ஸில் வெளிவந்த செய்தியில் 3ஜி மொபைல் போன் பற்றிய பின்னூட்டங்களில் இது "வளரும் இளஞர்களை வழிகெடுக்கலாம்" என எழுதியிருந்தது.

விஞ்ஞான வளர்ச்சியில் இதுபோன்ற புலம்பல்கள் சகஜம்

சில சமயங்களில் "நான் அப்பவே சொன்னேன்...யாரு கேட்க்குறா...அது அதும் பட்டாதான் புத்திவரும்' என்று பெரியவ்ர்கள் சொல்வதுக்கு தகுந்தமாதிரி புள்ளைங்களும் சொதப்பிடுவானுக.

நான் கேள்விப்பட்ட சில புலம்பல்கள்

# கால்குலேட்டர் மூளையின் செயலைகுறைத்துவிடும்
.

இவர்கள் சொன்னதை பிடித்துக்கொண்டு எடு பேப்பரையும் / பேனாவையும் 'எட்டுக்கால் ரெண்டு..பைத்தஞ்சு அம்பது" என்று பாடிக்கொண்டிருந்தால் " உங்கள் செயலைக்குறைத்து வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்'

# கைத்தொலைபேசி வைத்துகொள்வதால் பிரச்சினைதான்
.

இது நடைமுறையில் சாத்தியமே அல்ல. பொதுவாக இதுபோன்ற கோபத்தில் போடும் சட்டங்களுக்கு எக்ஸ்பயரி டேட் வெகு சமீபத்திலேயே இருக்கும்

இதுபொன்ற புலம்பல்கள் ஏன் வருகிறது ?

...உறவுகளின் நெருக்கம் குறைந்துவிட்டது.

பிள்ளைகள நாம் ரிசல்ட்டை வைத்தே பாசம் காண்பிக்கும் மனப்போக்கு மாற வேண்டும்.

பிள்ளகளின் விறுப்பு வெறுப்புகளை நாம் பேசியே தெரிந்துகொள்ளலாம் இதற்க்கெல்லாம் ஏஜன்ட் தேவையில்லை.

வளரும் இளைஞர்கள் [சில குடும்பங்களில்] தஞ்சாவூரை தாண்டவே பயப்படும் பெரியவர்களின் வாயிலிரிருந்து வரும் வார்த்தயை அநியாயத்துக்கு நம்புகிறார்கள். இவர்களும் [ பெரியவ்ர்களும்] அவ்வப்போது தனக்கு எது தெரியுமோ அது சரிதான் என சத்தியமாக பேசுகிறாகள்.

பெரும்பாலான வீடுகளில் T.V ரிமோட்டுக்கு உள்ள முக்கியத்துவம் உறவுகளுக்கு இல்லை.

சில பெண்களும் தன் பிள்ளை கம்ப்யூட்ட்ரில் கெட்டிக்காரன் என்று சொல்லவே பிரியப்படுகிறார்கள். இந்த பெண்களை அடையாளம் காண்பது மிக எளிது.
நான் தான் அவனை துபாய்க்கு ஏத்திவிட்டேன் / அமெரிக்காவுக்கு ஏத்திவிட்டேன் என்று கூட்டமான இடங்களில் இவர்களின் அலப்பரைக்குகுறைவு இருக்காது.
பிள்ளைகள் கம்ப்யூட்டரில் என்னதான் பார்க்கிறார்கள் என்பதை கவனிக்க வீட்டின் நடுவிடத்தைலெயெ கம்ப்யூட்டர் மேசை இருந்த்தால் பிரச்சினை குறைவு.

விஞ்ஞானம் உங்கள் உறவுகளின் மீது ஆதிக்கம் செலுத்தும்பொது கவனமாக இருக்க கடவது.

பெரும்பாலான குடும்ப பிரச்சினைகளை அன்பால் திருத்தி விடலாம். இது ஒன்றும் ஆசிரம ரேஞ்சுகான அறிவுரை அல்ல, நடைமுறையில் நாமாக போட்டுக்கொண்ட தேவையற்ற வேலியினால் வந்தது. பிள்ளைகளை டீன் ஏஜ் பருவங்களில் மரியாதை கருதி நாம் தூரமாகி விட்டோம்.

பிள்ளகளை வளர்ப்பது புத்தகத்தில் இல்லை...காலம் த்ரும் பாடம் அது.

ZAKIR HUSSAIN


read more...

Monday, April 5, 2010

படித்தேன் பகிர்ந்தேன் - பெற்றோரைப் பேணுவோம்

ஒரு வீடு என்பது மண்ணாலும் கற்களாலும் ஆனது. அதுபோல் ஒரு குடும்பம் என்பது அன்பாலும் பாசத்தாலும் ஆனது. அந்தப்பாசப்பிணைப்பு இன்று கொஞ்சங் கொஞ்சமாக மனித மனங்களிலிருந்து கழன்று கொண்டிருக்கிறதோ என்கின்ற ஐயப்பாடு தோன்றுகிறது.

பெற்றோர் அன்பு, சகோதர பாசம் உறவுத்தொடர்புகள் எல்லாம் குறைந்து வருகிறது. 'வீட்டின் பெயரோ அன்னை இல்லம் அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்.' சில இடங்களில் இன்று இந்த நிலைதான். இந்த நிலையில் தாய் - தந்தை உறவு பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதைப் பார்ப்போம்.

தாய்க்கு முதலிடம்: 'மனிதர்களுள் யாருக்கு நான் அதிகக் கடன்பட்டுள்ளேன்?' இது நபித்தோழர் ஒருவரின் வினா. 'தாய்' என்று பதிலளித்தார்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள். 'அடுத்து யார்?' என மீண்டும் அவர் கேட்க, 'தாய்' என்றே கூறினார்கள். மூன்றாவது முறையாக 'அடுத்து யார்?' என்று கேட்டபோதும் 'தாய்' என்றே பதில் வந்தது. 'அடுத்து யார்?' என நான்காம் முறையாக அவர் கேட்க 'தந்தை' என்று பதிலளித்தார்கள் நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள். ( அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, - புகாரீ ஷரீஃப்.)

ஒரு குழந்iயின் வளர்ச்சிக்கு தாய்-தந்தை இருவருமே காரணம் என்பது உண்மையானாலும் தந்தையைவிட தாய்க்கே முதலிடம் வழங்குகிறது இஸ்லாம். காரணம் என்ன? திருக்குர்ஆன் கூறுகிறது: 'அவனுடைய அன்னை, அவனைச்சிரமத்துடனேயே கருவுற்று சுமந்திருந்தாள். சிரமப்பட்டுத்தான் அவனைப் பெற்றெடுத்தாள். மேலும், அவனைச் சுமந்திருப்பதற்கும் பால்குடிப்பை மறக்கடிப்பதற்கும் முப்பது மாதங்கள் ஆகின்றன.' ( அல் குர்ஆன் 46:15).
தியாகத்திற்கு தாயைவிட வேறு சிறந்த உதாரணம் சொல்வது சிரமம். அவள் ஒரு குழந்தையின் பிறப்புக்காக இறப்பின் வாசல்வரை சென்று வருகிறாள; தன் உயிரைப் பணயம் வைத்துக் குழந்தையைப் பெறுகிறாள். குழந்தைக்காகத் தாய் செய்யும் தியாகம் மகத்தானது. கொஞ்ச நேரம் இளைப்பாறிக்கொள்ள ஒரு பத்து நிமிடம் மற்றொருவரின் விரகுச்சுமையைத் தாங்கி நிற்கவே ஒதுங்கிவிடுகிற இந்த காலத்தில் தொடர்ந்து பத்து மாதம் ஒரு சிசுவைத் தன் வயிற்றில் சுமப்பதென்பது எவ்வளவு பெரிய தியாகம்!

குழந்தைக்கு நோய் என்றால் தான் பத்தியம் இருக்கிறாள் என்பது மாத்திரம்அல்ல, நோய்வாய்ப்பட்ட குழந்தை மருந்து சாப்பிட விரும்பாதபோது நலமாயுள்ள தாய், தானும் அந்த மருந்தை சிறிது குடிக்கிறாள். ஏன்? தாய்க்கும் தனக்கும் ஒரே நோய்தான் என்று குழந்தை எண்ணி ஆறுதல் அடைவதற்காக. ஒரு அறிஞரின் சொல் எப்படி இருக்கிறது பாருங்கள்: 'ஒரு தாய் தனக்கு என்னவாவெல்லாம் இருக்கிறாள் என்பதை மனிதன் கடைசிவரை உணர்வதில்லை. அவன் அதை உணரும் போது அவள் உயிரோடு இருப்பதில்லை'. சிலரது வாழ்வில் இது உண்மையுங்கூட!

தாயன்பு: ஒரு பெண் தன் இரு பெண் மக்களுடன் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் வந்து யாசகம் கேட்டு நின்றாள். அவளிடம் மூன்று பேரித்தங்கனிகளை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கொடுக்கின்றார்கள். அவற்றில் ஒன்றை தனக்கு வைத்துக்கொண்டு மற்ற இரண்டையும் தன் மகள்களுக்கு சாப்பிடக் கொடுக்கிறாள். அவற்றை அவர்கள் சாப்பிடுகின்றனர். தனக்குரியதை சாப்பிட அந்த பெண் எத்தனித்த போது அதையும் தங்களுக்குத் தரக்கேட்டு அந்தக் குழந்தைகள் அடம்பிடிக்கின்றன. எவ்வித முகச்சுழிப்புமின்றி சந்தோஷமாக அப்பழத்தை இரண்டாகப் பிளந்து ஆளுக்கு ஒன்றாகக் கொடுத்துவிட்டு அவர்கள் சாப்பிடுவதை ரசித்துக் கொண்டிருந்தாள். இந்த நிகழ்ச்சி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹாவின் மனதைப்பெரிதும் பாதித்தது. இரவில் வீடு திரும்பிய நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் இந்த நிகழ்வைக்கூற, மெய்சிலிர்த்துப் போன நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'அவள் நேரடியாக சுவனம் செல்வாள்' என்ற சுபச்செய்தியை தெரிவிக்கிறார்கள். ( அப்துல்லா இப்னு அம்ர் ரளியல்லாஹு அன்ஹு - முஸ்லிம் ).

கண்ணியமான உறையாடல்: தாய் - தந்தையரிடம் மிக கண்ணியமான முறையில் நடந்து கொள்ளுங்கள். பெற்றோரில் ஒருவரோ இருவருமோ முதுமை அடைந்துவிட்ட நிலையில் உம்மிடம் இருந்தால் அவர்களை 'சீ' என்றுகூடக் கூராதீர். மேலும் அவர்களைக் கடிந்து பேசாதீர். மாறாக அவர்களிடம் கண்ணியமாகப் பேசுவீராக ( திருக்குர் ஆன் 17:23 ). பொதுவாக வயசு கூடக்கூட டென்ஷன் அதிகமாகும்.

இதுமாதிரி முதுமைப் பருவத்தில் பெற்றோர் நம் மனம் புண்படும் விதத்தில் நம்மைப் பேசிடலாம், ஏசிவிடலாம். ஆனாலும்கூட அதற்குப்பகரமாக நாம் பேசிடும் ஒவ்வொரு வார்த்தையிலும் கண்ணியம் இழையோட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் பெற்றோரின் மறியாதையைக் குதறிவிடக்கூடாது. 'பெற்றோரைத் திட்டுவது பெரும் பாவங்களில் ஒன்று' என நபிகள்நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்கள் கண்டிக்கிறார்கள். நீ நேரடியாகத் திட்டுவது ஒருபுறம் இருக்கட்டும், நீ ஒருவனின் தந்தையைத் திட்ட அவன் பதிலுக்கு உன் தந்தையைத் திட்டக்கூடிய சூழலைக்கூட உருவாக்கி விடாதே என்று உணர்த்துகிறார்கள். ( முஸ்லிம் )

உணவளிப்பது: நடைமுறை வாழ்வில் பெற்றோருக்கு உணவூட்டிப் பராமரிக்கும் விஷயத்தில்கூட கஞ்சத்தனம் செய்யப்படுகிறது. பெற்றோர் வசதியாக இருந்து பூர்வீகச்சொத்துகளில் கொஞ்சம் கூடுதலாகக் கிடைத்தால் உணவு, வசதி எல்லாவற்றிலும் அவர்களுக்கு சகல மரியாதையும் கிடைக்கிறது. இல்லையெனில் சாதாரண அளவுக்குக்கூட இருக்காது. நகை பணம் தந்தால் அம்மா அப்பா இல்லாவிட்டால் டப்பா. இது எந்த வகைக்குணமோ? அம்மா அப்பா உயிரோடிருக்கும்போதே ' நாற்காலி உனக்கு, கட்டில் எனக்கு, பீரோ உனக்கு கிரைண்டர் எனக்கு' என்று பொருட்களைப் பங்கு வைத்து, முடிவில் அப்பா உன்னிடம் அம்மா என்னிடம், அப்பாவுக்கு ஒரு வீட்டில் சாப்பாடு அம்மாவுக்கு இன்னொரு வீட்டில் சாப்பாடு என்று ஜடப்பொருட்களாகப் பெற்றோரைப் பங்கு பிரிக்கும் பண்பாட்டுச் சீர்குலைவை எண்ணி வருந்தாமல் இருக்க முடியவில்லை.

பெற்றோர்கள் இருவரையும் ஒருசேர வைத்து உணவு கொடுத்தால் என்ன? இருவருக்கும் சேர்த்து சமைப்பது கஷ்டமா? பொருள் நஷ்டமாகிவிடுமா என்ன? நாளை இவர்களை இவர்களுடைய பிள்ளைகள் சோறு ஒருவீட்டிலும் குழம்பு ஒரு வீட்டிலும் போட்டு கொடுமைப் படுத்தினால் என்ன செய்வார்கள்? 'எங்களுக்கே தட்டுப்பாடு, இதிலே பெற்றோர்களை எங்கே கவனிப்பது?' என்று கேட்பவர்களின் காதில் ஒருசெய்தியைப் போடவேண்டியுள்ளது. ஏழெட்டுக் குழந்தைகளுக்கு, தாய், தந்தை இருவருமாகச் சேர்ந்து சோறூட்ட முடிகிறதென்றால் அந்த ஏழெட்டுப்பேர் சேர்ந்து அந்த இருவருக்கும் சோறூட்ட முடியாதா என்ன!

இதிலே நகைப்பிற்குரிய செய்தி, உயிரோடு இருக்கும்போது ஒரு வாய் சோறு போட்டு பெற்றோரைக் கவனிக்காத சில ஆசாமிகள், அவர்களின் மரணத்திற்குப்பின் 'ஃபாத்திஹா' கொடுக்கிறோம் என்னும் பெயரில் பல்வேறு உணவுப்பொருட்களை முன்னால் வைத்து அமர்க்களப்படுத்துவார்கள். சிலர் திருமணத்திற்கு முன் பெற்றோருக்கு நன்கு உபகாரம் புரிவார்கள். ஆனால் மனைவியின் வருகைக்குப் பிறகு மாற்றங்கள் ஏற்படும்.தலையணைமந்திரம் என்று சொல்லவேண்டிய அவசியமில்லை. உடலால் தளர்ச்சியடைந்துவிட்ட பெற்றோரை மனைவியின் சொல்கேட்டு மனத்தளவிலும் தளர்ச்சியடைய வைப்பவன் மனிதாபமுள்ள மகனாக இருக்க முடியாது.

சிந்தனைக்கு சில அறிவுரைகள்: குழந்தைப் பருவத்தில் உங்கள் பெற்றோருக்கு நீங்கள் உபகாரம் புரிந்தால் முதுமைப் பருவத்தில் உங்களுடைய குழந்கைள் உங்களுக்கு உபகாரம் புரிவார்கள்.(அபூஹுரைரா ரளில்லாஹுஅன்ஹு (ஹாகிம்) இதை இப்படியும் புரட்டிப்போட்டுசொல்லலாம். தம்முடைய பெற்றோரை அவமதிக்கும் ஒவ்வொருவரும் அவர்தம் பிள்ளைகளால் பிற்காலத்தில் அவமதிக் கப்படுவது நிச்சயம்.

அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்க, பைஹகியில் பதிவாகியுள்ள ஆதாரப்பூர்வமான நபிவழிச்செய்தி: 'ஒவ்வொரு குற்றத்திற்கான தண்டனையும் மறுமையில் வழங்கப்படுவதுதான் இறைவிதி. ஆனால் பெற்றோருக்கு நோவினை செய்தவன் அதற்கான பிரதிபலனை இவ்வுலகிலேயே கண்கூடாகக் கண்டபின்பே இறப்பான். (நவூதுபில்லாஹ்)

முக்கியத்துவம் யார்க்கு  (தாய் / மனைவிகள்  / பிள்ளைகள்): நாம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு சம்பவம், 3 பேர்களை குகையில் பாரங்கள் மூடிய போது, அதில் ஒருவர் தன்னிடம் இருந்த பாலை தன் மனைவி, குழந்தைக்கு கொடுக்காமல் இரவுல்லாம் முழித்து தன் பெற்றோருக்கு கொடுத்த பிறகு தான், தன் மனைவி, குழந்தைக்கு கொடுத்தார்.

மனப்பதிவுக்கான இன்னொரு செய்தி: 'ஒரு நபித்தோழர் நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் அவைக்கு வந்து, நான் இஸ்லாத்திற்காக நாடுதுறந்து செல்லத்தங்களிடம் உறுதிமொழிஎடுத்திட வந்துள்ளேன்.என் தாய், இதற்கு அனுமதியளிக்காத நிலையில் அவரையழவைத்துவிட்டு இங்கே புறப்பட்டு வந்துள்ளேன்.' எனக் கூறினார். உடனே ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மொழிந்த வார்த்தை என்ன தெரியுமா? 'உடனே இங்கிருந்து புறப்பட்டு அழுதுகொண்டிருக்கும் உனது தயைச்சிரிக்க வைத்துவிட்டு பிறகு வந்து என்னைப்பார்.'(அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரளியல்லாஹுஅன்ஹு-அபூதாவூது).
நம்மில் சிலர் பெற்றோரை அழவைத்துவிட்டு தொழுது அல்லாஹ்வை சந்தோஷப் படுத்திடலாம் என்கிற எண்ணத்தில் இருக்கலாம். அவர்களுக்கான நபிமொழி செய்தி இது: 'அல்லாஹ்வின்; பொருத்தம் பெற்றோரின் பொருத்தத்தில் இருக்கிறது. அல்லாஹ்வின் கோபம் பெற்றோரின் கோபத்தில் இருக்கிறது.'பொதுவாக திருக்குர்ஆன் எல்லா இடங்களிலும் தாயோடு இணைத்து தந்தைக்கும் பணிவிடை செய்வதையே வலியுறுத்துகிறது. திருக்குர்ஆன் தெளிவுரையின் சிறந்தவராக கருதப்படும் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது திருக்குர்ஆன் விரிவுரையில் ''மூன்று திருக்குர்ஆன் வசனங்கள் ஒன்றுடன் இன்னொன்று இணைத்து வந்துள்ளன. ஒன்றை விட்டு விட்டு மற்றொன்றை மட்டும் செய்தால் அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான்.' என்கிறார்கள்.

அது:

1.'அல்லாஹ்வுக்கு வழிப்படுங்கள், அவன் தூதருக்கும் வழிப்படுங்கள்'(3:32) என்கிறது திருக்குர்ஆன். அல்லாஹ்வுக்கு மட்டும் வழிப்பட்டு அவன் தூதருக்கு வழிப்படாவிட்டால் அவனை அல்லாஹ் ஏற்க மாட்டான். (இங்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வழிப்படுங்கள் என்பது அவர்கள் சொல்லுக்கு கட்டுப்படுங்கள் என்பதாகும்)
2. ''தொழுகையை நிலை நிறுத்துங்கள் ஜகாத்தையும் கொடுங்கள்.'' (2:43)

என்கிறது திருக்குர்ஆன். வசதியுள்ள செல்வந்தன் ஜகாத் கொடுக்காமல் தொழுகையை மட்டும் தொழுதால் ஈடேற்றம் கிடைக்குமா?

3. ''எனக்கும் (அதாவது அல்லாஹ்வுக்கும்) உன்னுடைய தாய் தந்தையர்க்கும் நன்றி செலுத்தி வருவாயாக.'(31:14) என்கிறது திருக்குர்ஆன். அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியவன் தாய் தந்தைக்கு நன்றி செலுத்தாவிட்டால், அதையும் அல்லாஹ் ஏற்கமாட்டான்'' என்று இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் விளக்குகிறார்கள்.

அல்லாஹ்வின் அருள்மறை தெரிவிக்கிறது: ''அந்த இறைவணைத்தவிர வேறு எவரையும் நீங்கள் வணங்காதீர்கள். தாய் தந்தையரிடம் மிக கண்ணியமான முறையில் நடந்து கொள்ளுங்கள். பெற்றோரில் ஒருவரோ இருவரோ முதுமையை அடைந்து விட்ட நிலையில் உம்மிடம் இருந்தால், அவர்களை 'சீ' என்றுக் கூட கூறவேண்டாம். மேலும் அவர்களைக் கடிந்து பேசி விரட்டவும் வேண்டாம். ஆவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! இன்னும் இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக: மேலும், 'என் இறைவனே நான் குழந்தையாக இருந்தபோது என்னை இவர்கள் எவ்வாறு (அன்போடும் பாசத்தோடும்) வளர்த்தார்களோ, அவ்வாறே, நீயும் இவர்கள் மீது கருணை புரிவாயாக! என்றும் கூறி பிரார்த்திப்பீராக!'' (திருக்குர்ஆன் 17:23,24)

அதுமட்டுமின்றி, 'நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கம் நலம்; செய்ய வேண்டியது) பற்றி அறிவுறுத்திக் கட்டளையிட்டுள்ளோம்.' (திருக்குர்ஆன் 31:14) என்று பல இடங்களில்அ தாய் தந்தை இருவருக்கும் அடிபணிந்து நன்றி செலுத்தி வருமாறு கூறும் இல்லாஹ், தாயின் தகுதியை தந்தையைவிட ஒருபடி மேலாக உயர்த்திச் சொல்வதற்கான காரணத்தையும் கூறுகிறான்.
''அவனுடைய தாய் பலவீனத்தின் மேல் பலவீனம் கொண்டவளாக அவனைத் தன் கர்ப்பத்தில் சுமந்தாள், மேலும் அவன் பால்குடி மறக்க இரண்டு வருடங்கள் பிடிக்கின்றன.' (அல் குர்ஆன் 31:14)என்று தாய் அனுபவிக்கும் துன்பத்தை தெளிவாகக் கூறகிறான். 'பலவீனத்தின் மேல் பலவீனமாக' என்ற அல்லாஹ்வின் கூற்றுக்க இன்றைய மருத்துவ வல்லுநர்கள் கூறும் விளக்கத்தை கவனியுங்கள்:

குழந்தை தன் எலும்புகள் வளரத் தேவையான 'கால்சியம்' சத்தை தாயின் எலும்புகளிலிருந்து உறிஞ்சிக் கொள்கிறது. அதே போல் தனக்குத் தேவையான இரும்புச்சத்தை தாயின் இரத்தத்திலிருந்து பெற்றுக் கொள்கிறது.

தாயின் கருப்பைச் சுவர்கள் குழந்தைக்கு வேண்டிய இரத்தத்தை அதிகரிப்பதால் விரிவடைகின்றன. இதனால் தாயின் மூளைக்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைகிறது. தலை சுற்றல்கூட வரும். தாயின் இதயம் கற்ப காலத்தில் மட்டும் மிக அதிகமாக இயங்குகிறது. இதனால் தாய்க்கு அதிக களைப்பு நெஞ்சுக்கரிப்பு கூட ஏற்படுகிறது.

குழந்தையின் எடை அதிகரிக்கும்போது தாயின் கீழ் முதுகில் வலி ஏற்படுகிறது. இதன் மூலம் தலைவலி, வயிற்று வலி, கால்வலி, பார்வையில் மந்த நிலை ஏற்படுகிறது.

பொதுவாக குழந்தை பெற்ற பின் தாய்மார்களில் 25 முதல் 50 சதவிகித தாய்மார்கள் மனநலக்குறைவு அடைகிறார்கள் என்கின்றனர் மருத்துவ மேதைகள். மெய் சிலிரக்க வைக்கும் தாயின் தியாகத்தை மறக்கலாமா?

ராட்சசியாக இருக்கும் தாய்க்குமா மரியாதை!

சிலருக்கு ஒரு சந்தேகம் ஏற்படுவதுண்டு: ஒரு ராட்சசியாக இருக்கும் தாய்க்குமா மரியாதை செய்ய வேண்டும்?

ஆம்! மரியாதையும் பணிவிடையும் செய்தே ஆக வேண்டும். இஸ்லாத்தின் பார்வையில் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிற பாவத்தை விட பெரும்பாவம் எதுவும் இந்த உலகில் இல்லை. அப்பேர்பட்ட பாவம் புரிபவளாக ஒரு தாய் இருப்பினும் அவருக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளை செய்தே ஆக வேண்டும்.

ஹள்ரத் அஸ்மா பின்த் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹா என்கின்ற பெண்மணியின் தாயார் முஸ்லிமாகாத நிலையில் அல்லாஹ்வுக்கு இணை வைப்பவராக இருந்து கொண்டு தம் மகளை தேடி வந்த போது 'யா ரசூலுல்லாஹ், என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார், நான் அவருடன் உறவாடலாமா?' என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'ஆம்! நீ உன் தாயை பேணி இரக்கத்தோடு நடந்து கொள்,' என்றார்கள். ( ஆதாரம்: புகாரி )

முஸ்லிமாகாமல் இணை வைக்கிற பெரும் பாவத்தைச் செய்து வருகிற தாயே ஆனாலும், அவரைப் பேணி வருவது கட்டாயம் என்றால், ஒரு தாய் ராட்சசியாக இருக்கிறார் என்பதற்காக அவரை மதிக்காமல் இருக்க இஸ்லாம் அனுமதிக்குமா என்ன? ராட்சசியாக இருந்தாலும் அவரையும் இரக்கத்தோடு அணுகுவதே இஸ்லாத்தின் ஆணை.

'தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது''
என்று சொன்ன மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்பதை மறந்து விட வேண்டாம். நாம் அணைவரும் பெற்றோரைப் பேணக்கூடியவர்களாகத் திகழ எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக, ஆமீன்.

Jazakallah to all the my brothers and sisters

இவன்
முஜிபுர் ரஹ்மான்
Mujibur Rahman Bin Shaikh Dawood
Naduva Kalappal
TVR Dist.
Tamil Nadu


 
read more...

Friday, April 2, 2010

தெரிஞ்சிக்கலாமா? - 8

இந்த கட்டுரையில் கீழ்காணும் தலைப்புகளை பார்ப்போம்,
  • HTML Text Formatting
  • HTML Links
  • HTML List
  • HTML styles
  • HTML Table
மேலே சொன்ன அணைத்து தலைப்புகளும் மிக சுவரசியமானவையும், அனைவராலும் அதிகம் பயன்படுத்த கூடியவையாகும், அதி அப்படி என்னதான் சுவாரசியம் இருக்கின்றது, வாங்க பார்க்கலாம்.

HTML Text Formatting
முதலில் எழுத்தை வடிவமைக்க கூடிய tag க்குகள் என்னென்னவென்று பார்க்கலாம், பிறகு அவைகளின் பயன்பாட்டை பார்ப்போம்.

Text Formatting Tags

<b> எழுத்தை போல்டு செய்வதற்கு பயன்படுகிறது 
<big> எழுத்தை பெரிதாக்க பயன்படுகிறது 
<em> Defines emphasized text 
<i> எழுத்தை சற்று சாய்வாக அமைக்க உதவும் 
<small> எழுத்தை சிறிதாக்க உதவும் 
<strong> எழுத்தை strong ஆக்க உதவும்.
<sub> கீழஎழுத்து(subscript) அமைப்பதற்கு பயன்படும் 
<sup> மேல்எழுத்து(superscript) அமைப்பதற்கு பயன்படுகிறது 
<ins> எழுத்தை சொருகுவதர்காக பயன்படுகிறது 
<del> எழுத்தை அழித்ததை போன்று எழுதுவதற்காக பயன்படுகிறது 
<strike> எழுத்தின் நடுவே கோடிட்டு காட்ட உதவும்
<u> எழுத்தின் அடியில் கோடிட்டு காட்ட உதவும்

மேல் சொன்ன குறியீடுகள் அனைத்தையும் இங்கே உதாரணத்தோடு பார்க்கலாம.
 <html>

<body>
<p><b>This text is bold</b></p>

<p><strong>This text is strong</strong></p>

<p><big>This text is big</big></p>

<p><em>This text is emphasized</em></p>

<p><i>This text is italic</i></p>

<p><small>This text is small</small></p>

<p>This is<sub> subscript</sub> and <sup>superscript</sup></p>

</body>

</html>

வெளியீடு
-----------

This text is bold

This text is strong

This text is big

This text is emphasized

This text is italic

This text is small

This is subscript and superscript

This text is small

This text is small

-----------------------------------------------------------
HTML லின்குகள்(Links)
<html>
<body>
<p>
<a href="lastpage.htm">லிங்க் </a> இன்னொரு இணையபக்கத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது .</p>
<p>

<a href="lastpage.htm">
<img src="logo.gif" align="middle" width="48" height="48" /> </a>
</p>
மேலே படத்தை <img/>கை உபயோகித்து <a href> க்குள் இணைத்து லிங்காக மாற்ற வேண்டும்.
<p>
<p>
<a href="http://www.mansoorkmc.com/" target="_blank">Visit mansoor's website</a>
</p> //இங்கே target="_blank" என்பது, நாம் லிங்கை கிளிக் செய்யும்போது, தனியாக பக்கத்தை திறப்பதற்காக பயன்படுகிறது.
</p>
</body>
</html>

நீங்கள் பார்த்திருக்கலாம் ஒரே பக்கத்தில் பல பாராக்கள்(Paragraph) இருக்கும், அவைகளை ஒன்றோடொன்று லிங்க் செய்திருப்பார்கள், உதாரணமாக சொல்ல வேண்டுமானால், நீங்கள் பார்த்திருப்பீர்கள் ஏதேனும் பக்கத்தில் top என்ற பட்டன் கீழே இருக்கும் அதை கிளிக் செய்தவுடன் குறிப்பிட்ட இடத்துக்கு செல்லுமல்லவா அதை தான் இங்கு பார்க்க போகிறோம்.

Named anchor (<a name="label"></a>)கொண்டு குறிப்பிட்ட இடத்திற்கு பெயரை அமைக்க உதவும், பொதுவாக இணையபக்கத்தில் வெளிபடையாக இவை தெரியாது,

Named anchor syntax:
<a name="label">Any content</a> //இங்கே name="label" என்பது தான் அந்த இடத்தின் பெயர், பின்னர் அவைகளை கீழே சொல்லியுள்ளது போல் லிங்கை அமைத்து தேவையான பாகத்திற்கு செல்ல முடியும்.
The link syntax to a named anchor: 
<a href="#label">Any content</a>// கவனிக்க : மேலே சொன்ன name="label" லை இங்கே  href="#label" என்ற attribute உபயோகித்து லிங்க் செய்ய வேண்டும், ஒரே பக்கத்திற்குள் குறிப்பிட்ட பாகத்தை லிங்க் கொடுக்கும்போது # எழுத்தை அழைக்க போகும் பெயருக்கு முன் கண்டிப்பாக போடா வேண்டும்.    

Example:

ஒரு named anchor இணைய பக்கத்திற்குள் கீழுள்ளவாறு அமையவேண்டும்:
<a name="tips">Useful Tips Section</a>
சற்று மேலே சொல்லப்பட்ட name="tips", கீழே சொன்னவாறு லிங்க் கொடுக்க வேண்டும் : 
<a href="#tips">Jump to the Useful Tips Section</a>
------------------------------------------------------------------

HTML Lists

கீழ காணும் HTML  வெளியீட்டை(Output) பார்த்தாலே தெரியும், இவை பட்டியலிட்டு காட்டுவதற்கு உதவும், இவைகளை இரண்டாக பிரிக்கலாம் ஒன்று ordered List மற்றும் unorderlist .

unordered List   என்பது  பட்டியல்(List ), இவை பொதுவாக (starts with bullet  and   black circle ) கருப்பு நிற புள்ளியுடன் ஆரம்பிக்கும். இங்கு பட்டியலை ஆரம்பம் செய்யும்போது <ul > என ஆரம்பிக்க வேண்டும். 
<html>
<body>
<h4>An Unordered List:</h4>
<ul>
<li>Coffee</li>
<li>Tea</li>
<li>Milk</li>
</ul>

ordered list
என்பதும் ஒரு பட்டியல்தான், ஆனால் இவை எண்களில் ஆரம்பமாகும்.
<h4>An Ordered List:</h4>
<ol>
<li>Coffee</li>
<li>Tea</li>
<li>Milk</li>
</ol>
</body>
</html>
வெளியீடு



An Unordered List:

  • Cake
  • Ice cream
  • Mango


An Ordered List:



  1. Cake
  2. Ice cream
  3. Mango



பாக்கி இரு தலைப்புகளும் கட்டுரையின் நீளத்தை மனதிற்கொண்டு அடுத்த கட்டுரையில் ஆரம்பிக்கலாமென இருக்கிறேன், அடுத்த கட்டுரையுடன் HTML முடிகிறது, இணையப்பக்கத்தை வடிவமைக்க முன் HTML  கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டுமல்லவா ஆகையால் தான், என்னால் முடிந்த வரை விளக்கியிருக்கிறேன்.
read more...