Sunday, June 13, 2010

படித்தேன் பகிர்ந்தேன் - சிறந்த சான்றிதழ் படிப்புகள் !

வேலைக்கான சிறந்த 10 ஐ.டி., சான்றிதழ் படிப்புகள் எவை...

ஐ.டி., துறை தொடர்புடைய ஒரு புதிய வேலையையோ, அல்லது வகிக்கும் பதவியில் ஒரு உயர்வையோ பெறுவதற்கு ஐ.டி., துறை தொடர்புடைய சான்றிதழ் படிப்புகள் பெரிதும் உதவி புரிகின்றன.
இன்றைய உலகம் சர்வ தேசப் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் இந்த நாட்களில் பொருளாதாரம் நல்ல வளர்ச்சி அடைந்து வருவதோடு, ஐ.டி., துறையும் இழந்த பெருமையை மீண்டும் பெறும் நிலைக்கு முன்னேறி வருகிறது. இந்த மாற்றங்களின் அடிப்படையில் எந்தெந்த ஐ.டி., சான்றிதழ் படிப்புகளுக்கு இனி வரும் நாட்களில் நல்ல மதிப்பிருக்கும் என்ற ஒரு ஆராய்ச்சியை பூட் பார்ட்னர்ஸ் என்ற தொழில் ஆய்வு நிறுவனம் நடத்தியது. அந்த ஆராய்ச்சியில் அடையாளம் காணப்பட்ட முதல் 10 படிப்புகள் இவைதான் :


வி.எம்.வேர் சர்டிபைடு புரோபஷனல் : தற்போது வர்ச்சுவலைசேஷன் டெக்னாலஜிக்கு தேவை அதிகரித்து வருகிறது. எனவே வி.சி.பி., என்ற வி.எம்.வேர் சர்டிபைடு புரோபஷனல்களுக்கான தேவையும் அதிகரிக்கிறது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் வி.சி.பி.,களுக்கு அதிக தேவை இருப்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளதால் இந்தப் படிப்பு முதலிடத்தைப் பெறுகிறது.


சர்டிபைடு இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் ஆடிட்டர் : தகவல் தொழில் நுட்ப ஆடிட்டிங் பிரிவில் ஐ.எஸ்.ஏ.சி.ஏ., என்ற அமைப்பின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சி.ஐ.எஸ்.ஏ., என்ற சர்டிபைடு இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் ஆடிட்டர் சான்றிதழ் படிப்பு முன்னிலை வகிக்கிறது. இருந்த போதும் இந்த சான்றிதழைப் பெற ஐ.எஸ்.ஏ.சி.ஏ., அமைப்பு வகுத்துள்ள நிர்ப்பந்தங்களை முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.

ஜி.ஐ.ஏ.சி., செக்யூரிட்டி ஆடிட் எசன்சியல்ஸ் : ஒரு நிறுவனத்தின் திட்டம், செயல்முறை, ஆபத்துக்கள் போன்ற நிறுவனம் தொடர்புடைய தகவல் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த சான்றிதழ் படிப்பாகும் இது. இந்தப் பிரிவில் ஆர்வம் கொண்டவர்கள் இந்தப் படிப்பைப் படிக்கலாம்.

சர்டிபைடு இன்பர்மேஷன் செக்யூரிட்டி மேனேஜர் : ஐ.எஸ்.ஏ.சி.ஏ., அமைப்பினால் தகவல் பாதுகாப்பு மேலாளர்களுக்கு வழங்கப்படும் சி.எஸ்.ஐ.எம்., சான்றிதழ் படிப்பாகும் இது.

பாயிண்ட் சர்டிபைடு செக்யூரிட்டி எக்ஸ்பர்ட் : ஐ.டி., தகவல் பாதுகாப்புத் துறையில் அனுபவம் கொண்ட தொழில் நுட்ப அறிவு படைத்தவர்களுக்காக சி.சி.எஸ்.இ., என்ற சான்றிதழ் படிப்பு வழங்கப்படுகிறது. இந்தப் படிப்பு முழுக்க நுகர்வோரின் தேவைகளை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது சிறப்பாகும். இதனைப் படிப்பதன் மூலம் முழுமையான தகவல் பாதுகாப்பு குறித்த திறன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

பாயின்ட் சர்டிபைடு செக்யூரிட்டி அட்மினிஸ்டிரேடர் : இதுவும் பாயின்ட் சர்டிபிகேஷனில் மற்றொரு படிப்பாகும். சி.சி.எஸ்.ஏ., என்ற இந்தப் படிப்பில் உபயோகிப்பாளரின் அன்றாட பாதுகாப்பு, வலையமைப்பில் தகவல்கள் சிதறாமலிருப்பதற்கான வழிமுறைகள் ஆகியவற்றைப் பற்றி பாடப் பகுதிகள் இருக்கும்.

மைக்ரோசாப்ட் சர்டிபைடு சிஸ்டம்ஸ் என்ஜினியர்(செக்யூரிட்டி) : எம்.சி.எஸ்.இ., என்ற இந்த சான்றிதழ் படிப்பை மேற்கொள்வதன் மூலம் வடிவமைத்தல், செயல்படுத்துதல், உள்கட்டமைப்பு நிர்வாகம் ஆகிய பகுதிகளில் ஒரு தனி நபரின் திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும். வியாபாரத் தேவைகளை நிறைவேற்ற விண்டோஸ் 2003 மற்றும் விண்டோஸ் 2000 சர்வர்களை உபயோகிக்கும் நிறுவனங்களுக்கு இது முற்றிலும் பொருந்தும்.

சர்டிபைடு வயர்லெஸ் செக்யூரிட்டி புரபஷனல் : ஒயர்லெஸ் நெட் வொர்க்குகளைப் பெற உதவிடும் விதத்தில் வழங்கப்படும் மிக ஆழமான சான்றிதழ் படிப்பாக சி.டபிள்யூ.எஸ்.பி., படிப்பு இருக்கிறது. இந்தப் படிப்பில் 802.11 வயர்லெஸ் லான் டெக்னாலஜி குறித்த ஆழமான பாடப் பகுதிகள் இருக்கும்.

ஜி.ஐ.ஏ.சி., சர்டிபைடு இண்ட்ரூஷன் அனலிஸ்ட் : ஜி.சி.ஐ.ஏ., என்ற இந்தப் படிப்பும் தகவல் பாதுகாப்பு குறித்த ஒன்றுதான். இதில் தொழில் நுட்ப ரீதியான மற்றும் செயல்முறையுடன் கூடிய சிறப்பு அணுகுமுறைகள் உண்டு. இந்தப் படிப்பை சான்ஸ் என்ற கல்வி நிறுவனம் 1999 முதல் நடத்தி வருகிறது.

சிஸ்கோ சர்டிபைடு நெட்வொர்க் புரபஷனல் : சி.சி.என்.பி., என்ற இந்தப் படிப்பை சிஸ்கோ நிறுவனம் நடத்துகிறது. இதுவும் உபயோகிப்பாளரின் தேவைக்கேற்ப வடிவமைக்கப்பட்டதுதான். இந்தப் படிப்பில் லோகல் ஏரியா நெட் வொர்க்கில் திட்டமிடுதல், செயல்படுத்துதல், சோதனை செய்தல், பிரச்னைகளைக் கையாளுதல்,திறனாளர்களுடன் இணைந்து பாதுகாப்பு, ஒலி, வயர்லெஸ், மற்றும் வீடியோ தொழில் நுட்பம் போன்றவற்றில் பணியாற்றுதல் ஆகியவை கையாளப்படுகிறது. 


அதிரை - சர்புதீன்
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

17 comments: on "படித்தேன் பகிர்ந்தேன் - சிறந்த சான்றிதழ் படிப்புகள் !"

பனித்துளி சங்கர் said...

அனைவருக்கும் மிகவும் பயனுள்ளப்பதிவு . பகிர்வுக்கு நன்றி

Abu Khadijah said...

வாங்க சங்கர், உங்கள் முதல் வருகைக்கு நன்றி

தாஜுதீன் (THAJUDEEN ) said...

நல்ல பயனுல்ல தகவல்

Abu Khadijah said...

ஆம் சகோ. தாஜுதீன், மிக பயனுள்ள தகவல், இவை எண் நன்பரிடமிருந்து வந்தது

SUFFIX said...

நல்ல பகிர்வு. இது போன்ற சான்றிதழ் படிப்புகள் ஆன்லைனில் இருக்கான்னு பார்க்கணும், இருந்தால் பலருக்கும் உபயோகமா இருக்கும், சவூதி அரேபியாவில் இதுக்கு இன்ஸ்டியூட் இருக்குங்களா?

Abu Khadijah said...

ஜித்தாவுல இருக்கு, ஆனால் காஸ்ட்லி, நம்ம ஊருக்கு வெக்கேஷன் போகும்போது படிச்சுட்டு வந்திட வேண்டியது தான்.

உங்களுக்கு எந்த கோர்ஸ் ஜித்தாவுல வேனும், அதற்கு தகுந்தாற்போல் உங்களுக்கு எல்லா டீடைலையும் அனுப்பி வைக்கிறேன்

Adirai khalid said...

ஒ..... பரவாயில்லியே கலக்குறீங்க ., அதிரைமணம் மூலம் பயனித்தேன்., புசுசா எங்கோ இற‌ங்கிட்டோமோ என்று நினைத்தேன் ஆனாலும் இதுவும் சரியான இடம்தான். அங்கும் இங்கும் மேய்ந்தேன் நல்ல வடிவமைப்பு மற்றும் நல்ல விடயங்கள் வாழ்த்துக்கள் !! சகோதரே ! keep it up !!

Abu Khadijah said...

வாங்க சகோதரர் ஹாலித் அவர்களே, உங்களுடைய முதல் வருகைக்கு நன்றி, உங்களை போன்றவர்களின் வருகையும் ஊக்கமும் தான் என்னை மேலும் மேலும் எழுத தூண்டுகிறது,நான் இந்த இடத்துக்கு வந்து மூன்று வருஷமாச்சு, நீங்க இப்பத்தான் வர்றிங்களா, அப்பொ நிறைய மிஸ் பன்னிட்ட்ங்க.

Yasir said...

அடேடா...தமிழ்மணத்தை நுகர்ந்த போது..உங்கள் வலைப்பூவின் வாசனையும் தெரிந்தது....நல்ல பயனுள்ள பதிப்பு...வாழ்த்துக்கள் நண்பரே...

Yasir said...

அதிரைமணத்தை - என்று திருத்தி வாசிக்கவும்

Abu Khadijah said...

வாங்க சகோதரர் யாசிர், உங்களையெல்லம் அதிரைமனத்தின் வாயிலக வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தொடர்ந்து வாங்க. உங்களின் ஊக்கம் எனக்கு தேவை

Shameed said...

அதிரை மணம் மூலம் உங்களை கண்டதில் மகிழ்ச்சி

Shameed said...

படித்தேன் பகிர்ந்தேன்

Abu Khadijah said...

வாங்க சகோ.சாகுல் அவர்களே, உங்களின் முதல் வருகைக்கு நன்றி, தொடர்ந்து வாங்க.

Shameed said...

வருவோமுல

Post a Comment

வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?