Thursday, June 17, 2010

இளைய தலைமுறைக்கு

வருங்கால தலைமுறைக்கு எனக்கு தெரிந்த சில தன்னம்பிக்கையூட்டும் விடயங்களை பகிர்ந்து கொள்ளலாமென நினைக்கிறேன்.

மாணவப் பருவம் :
இந்த பருவம் மிக முக்கியமான பருவம், ஒவ்வொரு பிள்ளைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடிய பருவம். இப்பருவத்தில் எடுத்து வைக்கு ஒவ்வொரு அடியும் முக்கியமானவை. ஒவ்வொரு பெற்றோர்களும் தம் பிள்ளைகளுக்கு உறுதுணையாக இருந்து அவர்களின் வாழ்கையின் படிக்கட்டுகளில் முறையாக ஏற வழி செய்வோமையானால் வெற்றி நிச்சயம். சரி இவ்வளவு முக்கியமான பருவத்தை எப்படி அணுகுவது  என்பதை இந்த விடியோவில் பார்த்துவிட்டு மீதியை கீழுள்ள தலைப்பிலே பார்க்கலாம்.

திட்டமிடுதலும் நேர நிர்வாகமும்:
பொதுவாக எந்த ஒரு செயலை செய்ய நினைத்தாலும் அதை ஒரு திட்டத்துடன் அணுகும்போது அதில் வெற்றியும் கிடைக்கிறது, நேரத்தையும் மிச்ச படுத்துகிறோம், எனவே இங்கே நேரமும் மிக முக்கிய வாய்ந்ததாக இருக்கிறது, நாம் எதற்கெடுத்தாலும் நேரமில்லை நேரமில்லை என்ற புராணத்தை விட்டு விட்டு, கிடைத்த நேரத்தை சரியாக பயன்படுத்தி பாருங்கள் அப்பொழுது புரியும் நேரத்தின் அருமை. எந்த ஒரு விஷயத்தையும் தள்ளி போடகூடாது.நமக்கு முன் சாதிதவர்களுக்கும் இதே நேரத்தைத்தான் இறைவன் கொடுத்திருக்கிறான், அவர்களால் மட்டும் எப்படி சாதிக்க முடிந்தது. இவ்வளவு நேரத்தில் இத்தனை வேலைகள் முடிக்கிறோம் என்பது முக்கியமல்ல, இந்த நேரத்தில் என்னென்ன  முக்கியமான வேலைகளை திட்டமிட்டு முடித்தீர்கள் என்பதுதான் முக்கியம். ஆக காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை அவனுடைய ஒவ்வொரு வினாடியும் முக்கியமானதாக இருக்கிறது. ஆக இந்த பழக்கத்தை மாணவ பருவத்திலேயே செயல் படுத்த துவங்குவோமேயானால் வெற்றி உங்கள் காலடியில்.

தேடலும் விடாமுயற்சியும்:  
”தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசி இருக்கும்,| ஆக தேடி கிடைக்கும் ஒவ்வொன்றின் மூலமாக நாம் அடையும் சந்தோஷத்திற்கு அளவே இருக்காது. தேடலும் விடாமுயற்சியும் எவனிடம் இல்லையோ, அன்றே அவன் வாழ்கையில் பின்னோக்கி பயணிக்கிறான். சாதித்தவர்களின் சுயசரிதையை கொஞ்சம் புரட்டி பாருங்கள் அவர்கள் அடையாத கஷ்டங்கள் இல்லை, அவர்களின் வாழ்கையில் தேடலும் விடா முயற்சியும் தான் அவர்களை இந்த நிலைக்கு உயர்த்தி இருக்கிறது. ஆக வாழ்க்கையில் அடைய போகும் இலக்கு என்னவென்று முடிவெடுத்து கொண்டு அடைவதற்குண்டான வழிகளை வெகுவாக யோசிக்க வேண்டும், அடைய போகும் இலக்கை பெரிதாக யோசியுங்கள் அவைகளில் நமக்கு கொஞ்சம் கிடைத்தாலும் வெற்றிதான். 

இதை பற்றி நிறைய எழுத வேண்டுமென ஆசை, ஆகையால் அடுத்த  அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

11 comments: on "இளைய தலைமுறைக்கு"

பனித்துளி சங்கர் said...
This comment has been removed by the author.
பனித்துளி சங்கர் said...

இளைய தலைமுறைக்கு ஒரு புதிய தூண்டுகொள் இந்த பதிவு பகிர்வுக்கு நன்றி நண்பரே

Abu Khadijah said...

வருகைக்கு நன்றி நன்பரே, என்னாலான ஒரு சின்ன முயற்சி,

தாஜுதீன் (THAJUDEEN ) said...

இன்சா அல்லாஹ் இச்சகோதரி நிச்சயம் ஐ ஏ எஸ் படித்து நம் நாட்டுக்கும் நம் சமுதாயத்திற்கு நல்ல சேவைகளை செய்வார்.

என்ன அருமையான பக்குவமான பேச்சு, ஒவ்வொரு மாணவர்களும் கேட்கப்பட வேண்டிய ஒலி ஒளி.

பாராட்டுக்கள், பாராட்டுக்கள், பாராட்டுக்கள்.

இச்செய்தியில் உள்ள வீடியோவை பார்த்த போது, சந்தோசத்தில் கண்ணீர் வந்து விட்டது. நம் சமுதாய பெண்கள் பற்றி பொய் பிரச்சாரம் செய்துவருபவர்கள் இச்சகோதரியின் விடியோவை பார்த்தாவது பொய்ப் பிரச்சாரத்தை நிறுத்துவார்கள் என்று நம்பலாம்.

இச்செய்தியை இணையத்தில் வெளியிட்டதற்கு மிக்க நன்றி.

Shameed said...

வாழ்க்கையில் ரொம்ப முக்கியமானது தேடலும் விடாமுயற்சியும்

Abu Khadijah said...

@ நன்றி தாஜுதீன் உங்களின் வருகைக்கும் கருத்துக்கும்
@ நன்றி shahulhameed உங்களின் வருகைக்கும் கருத்துக்கும்

Ahamed irshad said...

நல்ல கட்டுரை....


///வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?///

>>>>>""கருத்து""<<<<


"சொல்லியாச்சு"

எங்கிட்டுப் போனாலும் வந்துருவோம்'ல......

Abu Khadijah said...

@இர்ஷாத், ஆஹா.... அவரா நீங்க, எங்கிட்டு போனாலும் விடமாட்டுங்குறியலப்பா,

Yasir said...

சூப்பர் அதிரை எக்ஸ்பிரஸ்...இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளை போட்டு...சும்மா பேரைக்கேட்டாலே அதிரும் எக்ஸ்பிரஸாக வளர வாழ்த்துக்கள்

Abu Khadijah said...

வாங்க யாசிர், இனிமே லேட் அட்டெண்டனஸுக்கு ஆப்செண்ட் போட்டுவேன், இனி சீக்கிரம் வரனும், சரியா?:)

//சும்மா பேரைக்கேட்டாலே அதிரும் எக்ஸ்பிரஸாக வளர வாழ்த்துக்கள்//
நீங்க அதிர்ந்தத வைத்தே புரிஞ்சிக்கிட்டோம்ல

அதிரை தும்பி said...

வாழ்த்துக்கள்..

Post a Comment

வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?