Showing posts with label webdesign. Show all posts
Showing posts with label webdesign. Show all posts

Friday, April 2, 2010

தெரிஞ்சிக்கலாமா? - 8

இந்த கட்டுரையில் கீழ்காணும் தலைப்புகளை பார்ப்போம்,
  • HTML Text Formatting
  • HTML Links
  • HTML List
  • HTML styles
  • HTML Table
மேலே சொன்ன அணைத்து தலைப்புகளும் மிக சுவரசியமானவையும், அனைவராலும் அதிகம் பயன்படுத்த கூடியவையாகும், அதி அப்படி என்னதான் சுவாரசியம் இருக்கின்றது, வாங்க பார்க்கலாம்.

HTML Text Formatting
முதலில் எழுத்தை வடிவமைக்க கூடிய tag க்குகள் என்னென்னவென்று பார்க்கலாம், பிறகு அவைகளின் பயன்பாட்டை பார்ப்போம்.

Text Formatting Tags

<b> எழுத்தை போல்டு செய்வதற்கு பயன்படுகிறது 
<big> எழுத்தை பெரிதாக்க பயன்படுகிறது 
<em> Defines emphasized text 
<i> எழுத்தை சற்று சாய்வாக அமைக்க உதவும் 
<small> எழுத்தை சிறிதாக்க உதவும் 
<strong> எழுத்தை strong ஆக்க உதவும்.
<sub> கீழஎழுத்து(subscript) அமைப்பதற்கு பயன்படும் 
<sup> மேல்எழுத்து(superscript) அமைப்பதற்கு பயன்படுகிறது 
<ins> எழுத்தை சொருகுவதர்காக பயன்படுகிறது 
<del> எழுத்தை அழித்ததை போன்று எழுதுவதற்காக பயன்படுகிறது 
<strike> எழுத்தின் நடுவே கோடிட்டு காட்ட உதவும்
<u> எழுத்தின் அடியில் கோடிட்டு காட்ட உதவும்

மேல் சொன்ன குறியீடுகள் அனைத்தையும் இங்கே உதாரணத்தோடு பார்க்கலாம.
 <html>

<body>
<p><b>This text is bold</b></p>

<p><strong>This text is strong</strong></p>

<p><big>This text is big</big></p>

<p><em>This text is emphasized</em></p>

<p><i>This text is italic</i></p>

<p><small>This text is small</small></p>

<p>This is<sub> subscript</sub> and <sup>superscript</sup></p>

</body>

</html>

வெளியீடு
-----------

This text is bold

This text is strong

This text is big

This text is emphasized

This text is italic

This text is small

This is subscript and superscript

This text is small

This text is small

-----------------------------------------------------------
HTML லின்குகள்(Links)
<html>
<body>
<p>
<a href="lastpage.htm">லிங்க் </a> இன்னொரு இணையபக்கத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது .</p>
<p>

<a href="lastpage.htm">
<img src="logo.gif" align="middle" width="48" height="48" /> </a>
</p>
மேலே படத்தை <img/>கை உபயோகித்து <a href> க்குள் இணைத்து லிங்காக மாற்ற வேண்டும்.
<p>
<p>
<a href="http://www.mansoorkmc.com/" target="_blank">Visit mansoor's website</a>
</p> //இங்கே target="_blank" என்பது, நாம் லிங்கை கிளிக் செய்யும்போது, தனியாக பக்கத்தை திறப்பதற்காக பயன்படுகிறது.
</p>
</body>
</html>

நீங்கள் பார்த்திருக்கலாம் ஒரே பக்கத்தில் பல பாராக்கள்(Paragraph) இருக்கும், அவைகளை ஒன்றோடொன்று லிங்க் செய்திருப்பார்கள், உதாரணமாக சொல்ல வேண்டுமானால், நீங்கள் பார்த்திருப்பீர்கள் ஏதேனும் பக்கத்தில் top என்ற பட்டன் கீழே இருக்கும் அதை கிளிக் செய்தவுடன் குறிப்பிட்ட இடத்துக்கு செல்லுமல்லவா அதை தான் இங்கு பார்க்க போகிறோம்.

Named anchor (<a name="label"></a>)கொண்டு குறிப்பிட்ட இடத்திற்கு பெயரை அமைக்க உதவும், பொதுவாக இணையபக்கத்தில் வெளிபடையாக இவை தெரியாது,

Named anchor syntax:
<a name="label">Any content</a> //இங்கே name="label" என்பது தான் அந்த இடத்தின் பெயர், பின்னர் அவைகளை கீழே சொல்லியுள்ளது போல் லிங்கை அமைத்து தேவையான பாகத்திற்கு செல்ல முடியும்.
The link syntax to a named anchor: 
<a href="#label">Any content</a>// கவனிக்க : மேலே சொன்ன name="label" லை இங்கே  href="#label" என்ற attribute உபயோகித்து லிங்க் செய்ய வேண்டும், ஒரே பக்கத்திற்குள் குறிப்பிட்ட பாகத்தை லிங்க் கொடுக்கும்போது # எழுத்தை அழைக்க போகும் பெயருக்கு முன் கண்டிப்பாக போடா வேண்டும்.    

Example:

ஒரு named anchor இணைய பக்கத்திற்குள் கீழுள்ளவாறு அமையவேண்டும்:
<a name="tips">Useful Tips Section</a>
சற்று மேலே சொல்லப்பட்ட name="tips", கீழே சொன்னவாறு லிங்க் கொடுக்க வேண்டும் : 
<a href="#tips">Jump to the Useful Tips Section</a>
------------------------------------------------------------------

HTML Lists

கீழ காணும் HTML  வெளியீட்டை(Output) பார்த்தாலே தெரியும், இவை பட்டியலிட்டு காட்டுவதற்கு உதவும், இவைகளை இரண்டாக பிரிக்கலாம் ஒன்று ordered List மற்றும் unorderlist .

unordered List   என்பது  பட்டியல்(List ), இவை பொதுவாக (starts with bullet  and   black circle ) கருப்பு நிற புள்ளியுடன் ஆரம்பிக்கும். இங்கு பட்டியலை ஆரம்பம் செய்யும்போது <ul > என ஆரம்பிக்க வேண்டும். 
<html>
<body>
<h4>An Unordered List:</h4>
<ul>
<li>Coffee</li>
<li>Tea</li>
<li>Milk</li>
</ul>

ordered list
என்பதும் ஒரு பட்டியல்தான், ஆனால் இவை எண்களில் ஆரம்பமாகும்.
<h4>An Ordered List:</h4>
<ol>
<li>Coffee</li>
<li>Tea</li>
<li>Milk</li>
</ol>
</body>
</html>
வெளியீடு



An Unordered List:

  • Cake
  • Ice cream
  • Mango


An Ordered List:



  1. Cake
  2. Ice cream
  3. Mango



பாக்கி இரு தலைப்புகளும் கட்டுரையின் நீளத்தை மனதிற்கொண்டு அடுத்த கட்டுரையில் ஆரம்பிக்கலாமென இருக்கிறேன், அடுத்த கட்டுரையுடன் HTML முடிகிறது, இணையப்பக்கத்தை வடிவமைக்க முன் HTML  கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டுமல்லவா ஆகையால் தான், என்னால் முடிந்த வரை விளக்கியிருக்கிறேன்.
read more...

Sunday, March 28, 2010

தெரிஞ்சிக்கலாமா? - 7

இந்த கட்டுரையிலிருந்து இதற்கு முன்  சொன்ன எல்லா டேக்கையும் செய்முறை விளக்கத்தோடு பார்க்கலாம். முதலில் கீழ் கானும் தலைப்புகளை பார்போம்.
  •  Paragraph tag
  •  Heading tags
  •  image tag
  •  Hyperlink


Paragraph Tag  - பந்தி அமைப்பதற்காக உள்ள குறியீடு

வெளியீடு
This is a paragraph.
This is a paragraph.
This is a paragraph.

மேலே சொன்ன   tag , பந்திகளை(Paragraph) அமைக்க உதவும், மேலும் இவைகளை தேவையான அட்ரிபியூட்(Attribute) கொண்டு பந்திகளை வடிவமைத்துக்(Formatting) கொள்ளலாம்.
Attributes
ALIGN = LEFT,RIGHT,JUSTIFY
----------------------------------------------------------------------------------------------------------------------------------

 Heading tags - தலைப்பிற்கான குறியீடுகள்


வெளியீடு

மேலே சொன்ன heading tag மிகவும் பயனுள்ளது, இவைகள் தலைப்புகளை அமைக்க உதவும். இவைகளை தேவையான் Attribute கொண்டு ஃபார்மேட்டிங் செய்யலாம்

Formatting செய்வதற்கென உள்ள Attribute
ALIGN = CENTER,LEFT,RIGHT,JUSTIFY

-----------------------------------------------------------------------------------------------------------------------------------
image tag - படத்தை இனைப்பதற்கான குறியீடு


வெளியீடு
மேலே சொன்ன image tag மிகவும் முக்கியமானது,  இவைகளைக் கொண்டு படங்களை உங்கள் பக்கத்தி இனைத்து கொள்ள முடியும், மேலே சொன்ன SRC என்பது நீங்கள் இனைக்க போகும் படம் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை காண்பிப்பதற்காக.  இவைகளை தேவையான் Attribute கொண்டு ஃபார்மேட்டிங் செய்யலாம்

Formatting செய்வதற்கென உள்ள Attribute
WIDTH= "numbers", ALIGN = CENTER,LEFT,RIGHT,JUSTIFY, alt="tool tip"(அல்லது) Title="tool tip"
எ.க: img src="images/1.jpg"  title="sample" width="800"
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
 Hyperlink tags - லின்க் கொடுப்பதற்கான குறியீடுகள்


வெளியீடு

மேலே சொன்ன hyperlink tag மிகவும் பயனுள்ளது, இவைகளை  கொண்டு ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்தை இனைக்க பயன்படும் . இவைகளை தேவையான் Attribute கொண்டு அதன் பயன்பாடை தெரிந்து கொள்ளலாம்

Attribute
TARGET="_blank அல்லது _self அல்லது _parents"
_ blank என்று கொடுத்தால்,  நாம் அந்த லின்கை கிளிக் செய்யும்போது அந்த பக்கம் இன்னொரு விண்டோவில் திறக்கும், _self என்று கொடுக்கும் போது, அதே பக்கதில் திறக்கும்.
எ.க: a href="link" target="_blank"
 -----------------------------------------------------------------------------------------------------------------------------------
 நல்ல இருந்தா Vote  போடுங்க, இல்லையெனில் கருத்தை பின்னுட்டமிட்டுங்க!
read more...

Saturday, March 27, 2010

தெரிஞ்சிக்கலாமா? - 6

 இதற்கு முந்தைய கட்டுரையில் சில டேக்குகளை பற்றி பார்த்தோம், இந்த கட்டுரையின் மூலம் HTMLன் அடுத்து சில முக்கிய டேக்குகளை(tags)  பார்த்து விட்டு, இனிவரும் கட்டுரைகளில்  முதல் கட்டுரையில் சொன்ன மென்பொருளைக்கொண்டு செய்முறை விளக்கத்தோடு பார்க்கலாம்.

சரி டேக்குகளை பற்றி ஓரளவு படித்தாச்சு, பிறகு அதை எப்படி அதன் அவுட்புட்டை(output)பார்ப்பது.

Step1: 
ஒரு  Notepad ல் HTML கோடிங்கை எழுதிக்கொண்டு, பிறகு அதை filename.html ஆக Save செய்ய வேண்டும்.

Step:2
பிறகு அதனை Internet Explorer அல்லது Firefox மூலம் எக்ஸிகியுட் செய்ய வேண்டும்

HTML பற்றிய மீதமுள்ள விளக்கம் கீழுள்ள இமேஜில் கொடுத்துள்ளேன், கிளிக் செய்து பெரிதாக்கவும் அல்லது கீழே கொடுக்கப் பட்டுள்ள PDF ஃபைலை download செய்து படிக்கவும்.


Download செய்யவும்

இனிவரும் கட்டுரையில் செய்முறை விளக்கத்தோடு பார்க்கலாம்
 நல்ல இருந்தா Vote  போடுங்க, இல்லையெனில் கருத்தை பின்னுட்டமிட்டுங்க!
read more...

Wednesday, March 24, 2010

தெரிஞ்சிக்கலாமா? - 5

 நாம் இதுவரை இணையதளம் என்றால் என்ன? அதனுடைய சிறப்புகளையும், இணையத்தை வடிவமைக்குமுன் நாம் செய்ய வேண்டிய சில வழிமுறைகளையும் பார்த்தோம், இனிவரும் கட்டுரைகளில் அவைகளை எப்படி செய்வது என்பதை சற்று விரிவாக பார்க்கலாம்.இதற்கு முன் உள்ள கட்டுரையில் இணைய வடிவமைப்பிற்கு தேவையான மென்பொருளைப்பற்றி பார்த்தோம். அவைகளில் இணைய வடிவமைப்பிற்கு அடிப்படையான HTML யைப பற்றி முதலில் பார்க்கலாம்.

HTML
  • HTML ன் விரிவாக்கம் Hyper Text Markup Language
  • HTML என்பது ஒரு ப்ரோக்ராமிங் மொழி அல்ல , அது ஒரு குறியீட்டு மொழி
  • குறியீட்டு மொழி என்பது ஒரு உள்ளடக்கத்தை எவ்வாறெல்லாம் டிஸ்பிலே செய்யலாம் என்பதை ஒரு வரைமுறைக்குட்பட்டு உருவக்க பட்ட மொழியாகும்.
  • இவைகள் குறியீடு(tag) கொண்டு உருவாக்க பட்டது
HTML என்ற இணைய குறியீட்டு மொழி கீழ்கண்டவாறு இருக்க வேண்டும்

 டேக்குகளை (tag) எழுதி ப்லாக் மூலம் பதிவிட  முடியவில்லை, ஆகையால் HTML பற்றிய விளக்கம் கீழுள்ள இமேஜில் கொடுத்துள்ளேன், கிளிக் செய்து பெரிதாக்கவும் அல்லது கீழே கொடுக்கப் பட்டுள்ள PDF ஃபைலை download செய்து படிக்கவும்.
இந்த முறையில் விளக்குவதன் மூலம் உங்களால் புரிந்துக் கொள்ள முடிகிறதா என்பதை பின்னுட்டமாக போட்டால் இனி வரும் பதிவுகளை நன்றாக கொடுக்க உதவும்.

Download செய்யவும்

இங்கு சில குறியீடுகளை(tag) பற்றி விவரித்திருக்கிறேன், மற்றவை அடுத்த பதிவில்.
 நல்ல இருந்தா Vote  போடுங்க, இல்லையெனில் கருத்தை பின்னுட்டமிட்டுங்க!
read more...

Monday, March 22, 2010

தெரிஞ்சிக்கலாமா? - 4

இந்த கட்டுரையில் இணையதளம் வடிவமைப்பதற்கு என்னென்ன தேவை என்பதை விரிவாக பார்க்கலாம், 
இணைய பக்கங்களை வடிவமைக்க வேண்டுமாயின், உங்களுக்கு சில மென்பொருளை பற்றி தெரிந்திருப்பது அவசியம், அவை என்னென்ன.

மென்பொருள்
  • Abobe Photosop
  • Adobe Dreamweaver
  • Adobe Flash
Clinet Side Language
  • HTML 
  • Javascript
  • மேலே சொன்ன மென்பொருள் அனைத்தும் அனேகமானோருக்கு  தெரிந்திருக்கலாம், அப்படி தெரியவில்லையெனில் கற்றுக்கொள்வது அவசியம்.  பொதுவாக Adobe Photoshop  பற்றி சொல்ல வேண்டுமானால் இவை இணையபக்கங்களை வடிவமைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது இன்றைக்கு இந்த மென்பொருள் இல்லாமல் இணையதளத்தை அழகுப்படுத்த முடியாது என்றே சொல்லலாம்.
  •  
  • Adobe Dreamweaver  என்பது இனைய மென் ஒருங்கு(Web Application Software), இணையப்பக்கத்தை  உருவாக்குவதற்காகவே சிறப்பம்சங்களோடு வடிவமைக்கப்பட்டதாகும், இந்த மென்பொருளை முதலில் Macromedia என்ற நிறுவனம் உருவாக்கியது, 2005 ஆம் ஆண்டு, Adobe என்ற நிறுவனம் இந்த மென்பொருளை பெற்று மேலும் மேம்படுத்திக் கொண்டிருக்கிறது.தற்போது இந்த நிறுவனம் CS3 யை வெளியிட்டிருக்கிறது.

  • Adobe Flash பற்றி உங்களுகெல்லாம் தெரிந்திருக்கும், இன்றைக்கு இனைய உலகில்  இதனுடைய பங்கு பெரும்பான்மையானது. இவைகளை கொண்டு கண்னை கவரும் அனிமேஷனை இனையப்பக்கத்திற்காக உருவாக்கலாம், மேலும் இவைகள் கல்வி நிறுவனங்கள் மற்றும் அனைத்து வகையான நிறுவனங்களில் பயிற்சி அளிப்பதற்காக CBT(Computer Based Training) என்ற முறையை இந்த மென்பொருளின் மூலம் உருவாக்குகிறார்கள்.
HTML
  • HTML ன் விரிவாக்கம் Hyper Text Markup Language
  • HTML என்பது ஒரு ப்ரோக்ராமிங் மொழி அல்ல , அது ஒரு குறியீட்டு மொழி
  • குறியீட்டு மொழி என்பது ஒரு உள்ளடக்கத்தை எவ்வாறெல்லாம் டிஸ்பிலே செய்யலாம் என்பதை ஒரு வரைமுறைக்குட்பட்டு உருவக்க பட்ட மொழியாகும்.
  • இவைகள் tag கொண்டு உருவாக்க பட்டது
  • சரியான tag கொண்டு கட்டளையிடுவதன் மூலம் வெளியீட்டை (Output) இனையப்பக்கத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
Javascript [விளக்கம் விக்கிபீட்யாவிலிருந்து எடுத்தது]
  • யாவாசிகிரிப்டு என்பது வலைத்தளங்களை வடிவமைக்க பரவலாகப் பயன்படும் ஒரு கணினி நிரல் மொழி ஆகும். பயனர் பக்க செயற்பாடுகள் யாவாசிகிரிப்டினால் பெரிதும் நடைமுறைப் படுத்தப்படுகின்றன. 1995 ஆம் ஆண்டு நெற்சுகேப் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மொழிக்கு தற்போது மிகவும் விருத்தி பெற்ற மென்பொருள் கட்டமைப்புகள் உள்ளன. யேகுவெரி, மொடூல்சு, கூகிள் வலை கருவிப்பெட்டி போன்றவை பரவலான பயன்பாட்டில் இருக்கும் யாவாசிகிரிப்டு கட்டமைப்புகள். பெயரில் ஒத்த ஜாவா நிரல் மொழிக்கும் இதற்கு எந்த நேரடி தொடர்பும் இல்லை
இனி அடுத்தடுத்த பதிவுகளில் மேலே சொன்ன மென்பொருளைப் பற்றியும் அவைகளைக் கொண்டு எப்படி செய்வதென்பதை பார்க்கலாம்.
read more...

Wednesday, March 17, 2010

தெரிஞ்சிக்கலாமா? - 3

இதற்குமுன் உள்ள கட்டுரைகளில் வெப் ஹோஸ்டிங்,வெப்சைட் என்றால் என்ன என்பதை விரிவாக பார்த்தோம், இக்கட்டுரையில் வெப்சைட் செய்யும் முன் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான சில வழிமுறைகளை இங்கு நான் கொடுத்தால் உங்களுக்கு ஒரு நல்ல இனையத்தளத்தை உருவாக்க ஏதுவாக இருக்கும்.

பொதுவாக எந்த ஒரு செயல் செய்யும் முன் அதை பற்றிய திட்ட்ங்கள் இருந்தால் தானே அந்த செயல் முழுமையடைய இலகுவாக இருக்கும், அதே போன்றுதான் இங்கு சில வழிமுறைகளை வகுத்து அதன் படி ஒரு இணையதளத்தை வடிவமைத்தால்தான் வேகமாகவும், அனைவராலும் ஏற்றுக்கொள்ள கூடியவையாக அமைக்க முடியும் .

அதென்ன அந்த வழிமுறைகள்,இதோ:
  1. முதலில் எந்த  நோக்கத்திற்காக இனையத்தளத்தை வடிவமைக்க போகிறீர்கள் என்பதை உறுதி செய்துக் கொள்ளுங்கள் [Try to find what is the focus point of the website? ]
  2. என்னென்ன  தனித்தன்மையான அம்சங்கள் கொடுக்க நினைக்கிறீர்கள் என்பதை குறித்துக் கொள்ளுங்கள்[Try to Note that What are the unique features you are going to give?]
  3. என்னென்ன பிரிவுகள் கொடுக்க போகிறீர்களோ அதை பற்றி விரிவாக எழுதிக்கொள்ளுங்கள் [Describe the section that what is going to be in your website]
  4. என்னென்ன உள்ளடக்கம்(Content) இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.[Finalize the Content of the website]
  5. எந்த வகையான தோற்றம்[Style] வேண்டும் என்பதை இனையத்தின் வரையறைக்குட்பட்டு டிசைன் செய்ய வேண்டும் [Choose the style and appearance as per the Web Industry Standard]
  6.  இனையத்தளத்தை வடிவமையுங்கள், பிறகு அதில் ஏதேனும் குறைகள் இருந்தால்  நிவர்த்தி செய்யுங்கள் [Build a website and evaluate, if there is any mistake]
  7. இறுதியாக முன் பதிவில் சொன்னது போல் உங்களுக்கென ஒரு domain, Hosting பதிவு செய்து கொண்டு உங்களுடைய இனையப்பக்கங்களை வெளியிடுங்கள்[Register a domain and Hosting with Good company and Make your website Go live].
சரி மேலே சொன்ன வழிமுறைகளை  கொஞ்சம் விரிவாக பார்த்தால்  இன்னும் சிறப்பாக இருக்குமென்று கருதி உங்களுக்காக சமர்ப்பிக்கிறேன்

இனையத்தளத்தின் நோக்கம்[Focus point of the Website ] :
இதுவே முதலும் மிக முக்கியமாகவும் இருக்கிறது, ஒரு இனையத்தளத்தை  வடிவமைக்குமுன் எந்த நோக்கத்திற்காக அதை வெளியிட போகிறீர்கள் என்பதை  நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.என்னென்ன தேவை, எப்படி கையாளுவது, எந்த இடத்தில்  உங்களுடைய தகவல்களை சேமிக்க வேண்டுமென்பதை ஒரு பட்டியல் போட்டு அதனை யாருக்கு நாம் டிசைன் செய்கிறமோ, அவர்களிடமும் ஒப்புதல் பெறுவதற்கான தகவல்கலை தயார் செய்ய வேண்டும்.

இனையத்தின் அம்சங்கள்
எப்படி செய்ய வேண்டுமென்பதை இதற்கு முன் பார்த்து விட்டோம், இருந்தாலும் குறிப்பாக என்னென்ன வகையான சிறப்பு அம்சங்கள் கொடுக்க வேண்டுமென்பதை முதலிலே தெரிந்திருக்க வேண்டும். உதாரணமாக ஆன்லைனில் பொருள் வாங்கும் வசதி, சேட்டிங் வசதி போன்ற அம்சங்களை  நன்கு அறிந்து அதன் படி வடிவமைத்தால் வெற்றிகரமான இணையதளமாக உருவாக்கலாம்.

முக்கிய பிரிவுகளை விவரித்தல்
முதலில் சொன்ன இரண்டு வழிமுறைகளை முடித்து விட்டாலே,  நீங்கள் ஏறக்குறைய வடிவமைத்து முடித்து விட்டீர்கள் என்று தான் அர்த்தம், இங்கே நீங்கள் முக்கியமாக ஒரு விஷயத்தை செய்தாக வேண்டும்,  ஒரு  வீடுகட்டுமுன் எப்படியெல்லாம் இருக்கவேணுமென திட்டமிட்டு வரைந்து வைத்து அதன் படி கட்டுகின்றீர்களோ அது போல்தான் ஒரு இணையம் வடிவமைக்குமுன் அவைகளில் எந்தெந்த பிரிவுகள் எங்கெங்கே இருக்க போகிறது, எந்த hierarchy யில் [மண்ணிக்கவும் தமிழில் தெரியவில்லை] இருக்க வேண்டுமென்பதை ஒரு சாஃப்ட்வேர் கொண்டு வரைந்துக் கொண்டு பிறகு வெப்சைட் டெவலப் செய்யும் போது, புரிந்து கொண்டு எளிதில் முடிக்க வசதியாக இருக்கும்.

ஒப்புதல் பெறுவதற்காக உள்ளடக்கத்தை(content) தயார் செய்தல்
என்ஜினியர் வீடு கட்ட பிளான் போட்டு அதை அந்த வீடு முதலாளியிடம் காட்டி சம்மதம் பெற்றப்பின் வேலையை எப்படி ஆரம்பிகிராரோ அதுபோன்றுதான் மேலே சொன்ன அனைத்தையும்  ஒரே ஆவணமாக தயார் செய்துக் கொண்டு , இந்த இனையத்தளம் உங்களுக்காக செய்தால் உங்களுக்கு நன்கு தெரிந்தவரிகளிடம் கான்பித்து அனைத்தும் சரியாக இருக்கின்றதா என்பதை உறுதி செய்து கொள்ளவும் அல்லது இந்த இனையத்தளம் பிற நிறுவனத்திற்கு செய்வீர்களானால் அந்த நிறுவனத்தில் ஒப்புதல் பெற்ற பின்பே ஆரம்பம் செய்ய வேண்டும்.

தோற்றமும் அதன் வரையறையும்
வீட்டை அதற்குண்டான கட்டட கலையுடன் கட்டினால்தானே பார்பதற்கு அழகாகவும் அனைவரும் ரசிக்கும் படி இருக்கும், அது போல் தான் ஓர் இணையதளத்தை உருவாக்கும் போது அதனுடைய முகப்பு பக்கத்திலிருந்து அதன் கடைசி பக்கம் வரை எவரேனும் பார்த்தல் சலிப்படையாதவாறு இருக்கும்படி பார்த்து கொள்ளவும். வரையறையை பற்றி ஒரு தனிகட்டுரையே எழுதலாம், சுருக்கமாக இங்கு பார்த்து விட்டு இனிவரும் கட்டுரையில் விளக்காமாக பார்க்கலாம், வரையறை என்பது ஒரு இணையதளம் இப்படிதான் இருக்க வேண்டும் என்ற சில விதிமுறைகள் இருக்கின்றன அதற்குட்பட்டு உருவாக்க வேண்டும், 
உதாரணமாக : microsoft கம்பெனிக்குன்டான இணையத்தையே  எடுத்துகொள்வோம், நீங்கள் அந்த இணையத்தில் உபயோகிக்கும் கலர்களை நீங்கள் பார்க்கலாம், அதைதான் பொதுவாக வெப் இண்டஸ்ட்ரியில் கார்பரேட் கலர் என்று சொல்லுவார்கள், ஏனென்றால ஒவ்வொரு பகுதியிலும் எல்லா வகையான கார்பரேட் கலர்களையும் உபயோகித்து இருப்பார்கள், மற்றும் அதனுடைய Navigation(Links) Bread Crumb உபயோகித்து இருப்பார்கள், Color, Navigation போன்றவைகள் எல்லாம் Web Standard க்கு உட்பட்டது

Bread crumb என்றால் தற்போது நாம் எந்த பக்கத்தில் இருக்கிறோம் என்பதை காட்ட கூடியது

எ.க: About us--->Corporate Information, இங்கே நாம் கார்பரேட் பக்கத்தில் இருக்கோம் என்பதை சுட்டி காண்பிக்கிறது,


இனையத்தை தயார் செய்த பின் சரி பார்த்தல்
இப்பொழுது  நாம் கடைசி ஸ்டெப்புக்கு வந்து விட்டோம், இனையத்தை தயார் செய்தாகிவிட்டது பிறகென்ன அவையனைதையும் ஒரு டொமைன் மற்றும் ஹோஸ்டிங் கணக்கு வாங்கியப் பின் FTP(File Transfer Protocol)சாஃப்ட்வேர் மூலம் எல்லா ஃபைல்களையும் அப்லோடு செய்ய வேடியது தான்.

read more...