Monday, March 22, 2010

தெரிஞ்சிக்கலாமா? - 4

இந்த கட்டுரையில் இணையதளம் வடிவமைப்பதற்கு என்னென்ன தேவை என்பதை விரிவாக பார்க்கலாம், 
இணைய பக்கங்களை வடிவமைக்க வேண்டுமாயின், உங்களுக்கு சில மென்பொருளை பற்றி தெரிந்திருப்பது அவசியம், அவை என்னென்ன.

மென்பொருள்
  • Abobe Photosop
  • Adobe Dreamweaver
  • Adobe Flash
Clinet Side Language
  • HTML 
  • Javascript
  • மேலே சொன்ன மென்பொருள் அனைத்தும் அனேகமானோருக்கு  தெரிந்திருக்கலாம், அப்படி தெரியவில்லையெனில் கற்றுக்கொள்வது அவசியம்.  பொதுவாக Adobe Photoshop  பற்றி சொல்ல வேண்டுமானால் இவை இணையபக்கங்களை வடிவமைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது இன்றைக்கு இந்த மென்பொருள் இல்லாமல் இணையதளத்தை அழகுப்படுத்த முடியாது என்றே சொல்லலாம்.
  •  
  • Adobe Dreamweaver  என்பது இனைய மென் ஒருங்கு(Web Application Software), இணையப்பக்கத்தை  உருவாக்குவதற்காகவே சிறப்பம்சங்களோடு வடிவமைக்கப்பட்டதாகும், இந்த மென்பொருளை முதலில் Macromedia என்ற நிறுவனம் உருவாக்கியது, 2005 ஆம் ஆண்டு, Adobe என்ற நிறுவனம் இந்த மென்பொருளை பெற்று மேலும் மேம்படுத்திக் கொண்டிருக்கிறது.தற்போது இந்த நிறுவனம் CS3 யை வெளியிட்டிருக்கிறது.

  • Adobe Flash பற்றி உங்களுகெல்லாம் தெரிந்திருக்கும், இன்றைக்கு இனைய உலகில்  இதனுடைய பங்கு பெரும்பான்மையானது. இவைகளை கொண்டு கண்னை கவரும் அனிமேஷனை இனையப்பக்கத்திற்காக உருவாக்கலாம், மேலும் இவைகள் கல்வி நிறுவனங்கள் மற்றும் அனைத்து வகையான நிறுவனங்களில் பயிற்சி அளிப்பதற்காக CBT(Computer Based Training) என்ற முறையை இந்த மென்பொருளின் மூலம் உருவாக்குகிறார்கள்.
HTML
  • HTML ன் விரிவாக்கம் Hyper Text Markup Language
  • HTML என்பது ஒரு ப்ரோக்ராமிங் மொழி அல்ல , அது ஒரு குறியீட்டு மொழி
  • குறியீட்டு மொழி என்பது ஒரு உள்ளடக்கத்தை எவ்வாறெல்லாம் டிஸ்பிலே செய்யலாம் என்பதை ஒரு வரைமுறைக்குட்பட்டு உருவக்க பட்ட மொழியாகும்.
  • இவைகள் tag கொண்டு உருவாக்க பட்டது
  • சரியான tag கொண்டு கட்டளையிடுவதன் மூலம் வெளியீட்டை (Output) இனையப்பக்கத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
Javascript [விளக்கம் விக்கிபீட்யாவிலிருந்து எடுத்தது]
  • யாவாசிகிரிப்டு என்பது வலைத்தளங்களை வடிவமைக்க பரவலாகப் பயன்படும் ஒரு கணினி நிரல் மொழி ஆகும். பயனர் பக்க செயற்பாடுகள் யாவாசிகிரிப்டினால் பெரிதும் நடைமுறைப் படுத்தப்படுகின்றன. 1995 ஆம் ஆண்டு நெற்சுகேப் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மொழிக்கு தற்போது மிகவும் விருத்தி பெற்ற மென்பொருள் கட்டமைப்புகள் உள்ளன. யேகுவெரி, மொடூல்சு, கூகிள் வலை கருவிப்பெட்டி போன்றவை பரவலான பயன்பாட்டில் இருக்கும் யாவாசிகிரிப்டு கட்டமைப்புகள். பெயரில் ஒத்த ஜாவா நிரல் மொழிக்கும் இதற்கு எந்த நேரடி தொடர்பும் இல்லை
இனி அடுத்தடுத்த பதிவுகளில் மேலே சொன்ன மென்பொருளைப் பற்றியும் அவைகளைக் கொண்டு எப்படி செய்வதென்பதை பார்க்கலாம்.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

15 comments: on "தெரிஞ்சிக்கலாமா? - 4"

சசிகுமார் said...

என்னங்க பெரிய பெரிய விஷயத்தை எல்லாம் சொல்லி கொடுக்கிறீங்க இனிமேல் பாலோ பண்ண வேண்டியதுதான்.உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Abu Khadijah said...

வாங்க சசிகுமார், உங்கள் முதல் வருகைக்கு நன்றி, இன்னும் பெரிய விஷயங்களை சொல்லிக் கொடுக்கவில்லை இனிமேல் தான். மீண்டும் வாருங்கள்

SUFFIX said...

தாங்கள் தரும் தகவல்கள் அனைத்தையும் படித்து, சேகரித்து வருகிறேன், தகுந்த நேரத்தில் முயற்சி செய்ய வேண்டும், சந்தேகம் ஏற்படில் கேட்டுத் தெரிந்து கொள்கிறேன். தொடர்ந்து எழுதவும், ஒரு புத்தகம் போல் உருவாக்கிட உதவும்.

Abu Khadijah said...

நன்றி சகோதரர் ஷஃபி அவர்களே, உங்களின் ஊக்கம் என்னை மேலும் நன்றாக எழுத தூண்டுகிறது,

நட்புடன் ஜமால் said...

ஒரு சாம்பிள் ஃபைல் எழுதி அதை கொண்டு விளக்கம் கொடுத்தால் என்னை போன்றோருக்கு எளிதில் விளங்கும்.

நல்ல சேவை.

Abu Khadijah said...

இதுவரையும் எல்லா கட்டுரையிலும் இணையத்தின் சிறப்புகளை, அதற்கு என்னென்ன தேவை பார்த்திருக்கிறோம்,இனிமேல் தான் எப்படி செய்ய வேண்டும் என்று வரும்போதுதான் நீங்கள் சொல்லுவது போல் கொடுக்கலாமென நினைத்திருந்தேன், நன்றி ஜமால் காக்கா உங்கள் கருத்துக்கு

DREAMER said...

அருமையான தகவல்கள்..!

-
DREAMER

Abu Khadijah said...

நன்றி சகோதரர் DREAMER உங்கள் வருகைக்கு, தொடர்ந்து வாருங்கள்

ஹுஸைனம்மா said...

ஸாரிங்க லேட் அட்டெண்டன்ஸுக்கு.

Macromedia Flash & Adobe Flash - ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?

//யாவாசிகிரிப்டு, கணினி நிரல் மொழி, பயனர் பக்க செயற்பாடுகள், நெற்சுகேப், விருத்தி பெற்ற மென்பொருள் கட்டமைப்புகள், யேகுவெரி, மொடூல்சு, கூகிள் வலை கருவிப்பெட்டி//

இதுக்கெல்லாம் தமிழ்/ ஆங்கிலத்தில் பெயர்கள் என்ன? இந்த ஒரு பத்தி எனக்குச் சுத்தமா புரியல. சுத்தத் தமிழ்ல கணிணி பற்றி எழுதினா புரிஞ்சிக்க சிரமம்; அதுக்குரிய ஆங்கில வார்த்தைகளையும் அடைப்புக்குறிக்குள்ள கொடுத்தீங்கன்னா எனக்கும் புரிஞ்சுக்க வசதியா இருக்கும்.

Abu Khadijah said...

//Macromedia Flash & Adobe Flash - ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?//
இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை, மாறாக Macromedia என்ற நிறுவனம் Flash உருவாக்கியது, தற்போது Adobe என்ற நிறுவனம் இந்த மென்பொருளை மேம்படுத்திக் கொண்டிருக்கிறது.

//யாவாசிகிரிப்டு, கணினி நிரல் மொழி, பயனர் பக்க செயற்பாடுகள், நெற்சுகேப், விருத்தி பெற்ற மென்பொருள் கட்டமைப்புகள், யேகுவெரி, மொடூல்சு, கூகிள் வலை கருவிப்பெட்டி//

மண்ணிக்கவும், தமிழிலும், ஆங்கிலத்திலும் குழப்ப கூடாது என்பதற்காகத்தான் அப்படியே விட்டுவிட்டேன்.

யாவாசிகிரிப்டு = Javascript
நிரல் மொழி = Scripting Language
யேகுவெரி =jquery
1.Javascript என்பது ஒரு நிரல் மொழி(Scripting Language)
2.இவை இனையப் பக்கத்தோடு இண்டராக்ட் செய்வதற்காக வடிவமைக்க பட்டதாகும்
3.இவைகளை நாம் நேரடியாக HTML பக்கத்தி இனைத்து கொள்ளலாம்
4.Java வும் javascript வும் வெவ்வேறு, இரண்டும் ஒன்றல்ல
5.யார் வேண்டுமானாலும், லைசன்ஸ் இல்லாமல் உபயோகிக்கலாம்

யேகுவெரி =jquery
இவை கொஞ்சம் ஜாவாஸ்கிரிப்ட்டை விட அட்வான்சானது

அப்துல்மாலிக் said...

கமெண்டில் சொன்ன விளக்கம் அருமை

தெளிவான விளக்கம், நன்றி பகிர்தலுக்கு

Abu Khadijah said...

நன்றி அபூஅஃப்ஸர் உங்கள் கருத்துக்கு.

Muthu said...

Hi Adiraiexpress,

welldone. you are doing the great job. keet it up. thanks a lot. To teach us such good lesson. please continue it. we expected more form you...

Abu Khadijah said...

Welcome Mr.Rajagopal,Thanks for your First Visit , sure ill continue as much as i can.

Sathya said...

வெப்டிசைநிங் செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் : https://www.youtube.com/watch?v=YtXOWFMd3Uw

Post a Comment

வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?