Sunday, March 14, 2010

தெரிஞ்சிக்கலாமா? - 2

இதற்கு முந்தைய கட்டுரையில் சுருக்கமாக வெப் ஹோஸ்டிங் பற்றி கொடுத்திருந்தேன், இக்கட்டுரையில் கொஞ்சம் விரிவாக கொடுத்தால் நன்றாக இருக்குமென கருதி, உங்களுக்காக இதை சமர்ப்பிக்கிறேன்.

வெப் ஹோஸ்டிங் என்றால் என்ன?
உதரணமாக ஒரு வீடே வைத்துக் கொள்வோம், நம்மில் பல பேர் வெளியுருக்கு வேலைக்காக சென்ற பிறகு, அங்கு தங்குவதற்கு, பொருளை வைப்பதற்கு வீடு தேவைபடுகிறதில்லையா , இந்த வீடுகளை நாம் பலவகையாக பிரிக்கலாம், அனைத்து வசதிக்குட்பட்ட வீடாகவும், சில வீடுகள் வசதிகள் குறைந்தவாறு இருக்கலாம். இந்த வெப்ஹோஸ்டிங்கும் அப்படித்தான், நம்முடைய கணிணியில் இனையத்தளத்தை வடிவமைத்த பிறகு அதை அனைவருக்கும் தெரியும்படி அமைக்க வேண்டுமல்லவா?  நம்முடைய அனைத்து ஃபைல்கலையும் பதிவு செய்வதற்காக ஒரு இடத்தை வாங்குவதற்கு பெயர்தான் வெப் ஹோஸ்டிங் என்பதாகும்

 இவைகளை சில வகையாக பிரிக்கலாம்,
  • Free Hosting
  • Shared hosting
  • VPS hosting
  • Domain Registrar
 Free Hosting
ஒரு நிறுவனம் உங்களுக்காக ஒரு வீடு  இலவசமாக கொடுத்து தங்குவதற்கு சில வசதிகளை அமைத்து தருகிறார்கள் என்று வைத்து கொள்வோம், இங்கு வீட்டில் உள்ள நபரின் பெயருக்கு முன்னாலோ, பின்னாலோ அந்த நிறுவனத்தின் பெயரையோ அல்லது வீட்டிற்கு பக்கத்தில் அவர்களின் விளம்பரங்களையோ போட சொல்லி கட்டாய படுத்துவதில்லை , ஆனால் ஃப்ரீ ஹோஸ்டிங்கில் ஒரு  சில விசயங்களில் மாறுபடுகிறது, அது என்ன? இங்கு உங்களுக்கு ஃபைலை போட்டு வைப்பதற்கு ஒரு இடத்தை தந்து  நிறைய வசதிகளை குறைத்து விட்டு  உங்களுடைய இனைய பக்கத்தில் அவர்களுடைய விளம்பரங்களை போட சொல்லி கட்டாயப் படுத்துகிறார்கள். 

உங்கள் இனையத்தளம் பெர்சோனல்(Personal Website) வெப்சைட்டாக இருக்கும் பட்சத்தில், உங்களுடைய ஃபைல்கள் அவ்வளவு முக்கியமில்லை என கருதினால்  அல்லது உங்களுடைய இனையப்பக்கங்களில் விளம்பரம் இருந்தால் பரவாயில்லையென தோன்றினால் Free Hosting தேர்ந்தெடுப்பது சிறந்தது. 

முக்கியமாக இங்கு ஒரு விசயத்தை சொல்லியாக வேண்டும், இப்படி பொதுவாக  ஹோஸ்ட் செய்யப்படும் ஃபைல்களுக்கு அவர்கள் எந்த ஒரு பாதுகாப்பும் கொடுப்பதில்லை.
ஆகையால் நான் உங்களுக்கு ரெக்கமெண்ட் செய்வதெல்லாம் பைடு ஹோஸ்டிங் தான்.

Shared Hosting
Shared Hosting என்பது Free Hosting விட ஒரு படி மேலானது, நீங்கள் இங்கு குறைந்த விலையில் நிறைய வசதிகளுடன் இடத்தை பெற்றுக் கொள்ளலாம்,  நிறைய நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு விலையை குறைத்து தருகிறார்கள், சில நிறுவனங்கள் விலையை குறைத்து தருகிறார்கள் என்பதற்காக அவர்களை குறைத்து எடை போட வேண்டாம்,  நீங்கள் நினைக்கலாம் அவர்கள் மட்டும் எப்படி விலையை இவ்வளவு குறைத்து தருகிறார்கள் என்று? ஏனெனின் மொத்த இடத்தில் உங்களுக்கு தேவையான இடத்தை மட்டும் பகிர்ந்துக் கொள்வதால் அவர்களுக்கு இந்த விலையில் கொடுக்க முடிகிறது, ஆகையால் நீங்கள் குறைந்த விலையில் ஹோஸ்டிங் வாங்க நினைக்கும் போது அதனோடு ஒத்த வேறு நிறுவனத்துடன் அதனுடைய் விலையையும் அதன் வசதிகளையும் ஒப்பிட்டு பார்த்து வாங்கினால் நன்றாக இருக்கும்.

இங்கு  நீங்கள் ஹோஸ்ட் செய்யப்படும் ஃபைல்களுக்கு பாதுகாப்பு தரப்படுகிறது.

VPS Hosting
Vps Hosting என்பது மேல் சொன்ன இரு ஹோஸ்டிங் விட சற்று பெரியது, நிறைய பாதுகாப்பு அம்சங்கள் அமைந்தது ,ஆனால் விலை ரொம்ப அதிகமானது

ஏன் விலை அதிகம்
ஏனெனில் இங்கு உங்களுக்கென ஒரு தனிப்பட்ட செர்வர் ஒதுக்கபடுகிறது, இப்படி உங்களுக்கென ஒதுக்கப்படுவதால் மேல் சொன்ன இரு ஹோஸ்டிங்(Free/Shared hosting ) காட்டிலும் வேகமாக இருக்கும். விலை அதிகமென்றால் ஏன் இந்த வகை இருக்கிறது என்று கேட்கின்றீர்களா? ஏனென்றால் இவைகள் பெரும்பாலும் சாதாரன மக்கள் உபயோக படுத்துவதில்லை, பெரிய, சிரிய நிறுவனங்கள் தங்களுடைய இனையதளங்களை  லட்சகணக்கில் மக்கள்  நாடும் போது வேகமாக கிடைப்பதற்க்காக பயன் படுத்துகிறார்கள்.

இந்த வகையான ஹோஸ்டிங்கை அனுபவம் வாய்ந்த வெப் மாஸ்டர்களாலயே கையாளப் படுகிறது.

Domain name /  Registrar:
டொமைன் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும் http://www.mansoorkmc.com, இந்த பெயரை யாரிடம் நான் வாங்கினேனோ  அந்த நிறுவனத்துக்கு பெயர்தான் Domain Registrar.
நீங்கள் உதாரணமாக இந்த பெயரை இலவசமாக வாங்கிய பிறகு நீங்கள் பார்க்கலாம் "http://www . adiraiexpress . blogspot . com" . இங்கு adiraiexpress என்பது subdomain எனப்படும்.

இனி வரும் பதிவுகள், வெப் பேஜ் எப்படி டிசைன் செய்வது, அதற்கு என்னவெல்லாம் தேவை என்பதை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

15 comments: on "தெரிஞ்சிக்கலாமா? - 2"

அப்துல்மாலிக் said...

மன்சூர் நல்ல பயனுள்ள தகவல்
கற்பித்தலே மேலும் கற்க தூண்டும்
அந்த வகையில் இதுமாதிரி சில பதிவுகள் கூட கற்பித்தலே

தொடருங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக்கிட்டிருக்கோம்

அப்துல்மாலிக் said...

www.tamilish.com www.tamilmanam.net மேற்கொண்ட தளங்களின் உங்க பதிவுகளை இணைத்தால், நிறைய பேரை சென்றடைய வாய்புள்ளது.

Abu Khadijah said...

நன்றி அபுஅஃப்ஸர், உங்கள் கருத்துக்கும் என்னை மேலும் ஊக்க படுத்தியதற்கும்.

Abu Khadijah said...

நன்றி அபுஅஃப்ஸர், நான் www.tamilish.com ல் இனைத்து விட்டேன்.

நட்புடன் ஜமால் said...

மிக்க நன்றி - வெப் டிசைன் பற்றி அறிந்து கொள்ள எனக்கும் நிறைய ஆவல் உண்டு.

Abu Khadijah said...

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோதரர் ஜமால் அவர்களே, இன்ஷா அல்லாஹ் எனக்கு தெரிந்தவரை இங்கு நான் கொடுக்க முயற்சி செய்கிறேன்

ஹுஸைனம்மா said...

//VPS Hosting// - விரிவாக்கம் என்ன?

தமிழிஷ், தமிழ்மணம் சேருங்க. அப்பத்தான் நிறைய பேர் பார்வைக்கு வரும். பிறரின் பதிவுகளிலும் போய்ப் பாருங்க.

/ரெக்கமெண்ட் செய்வதெல்லாம் பைடு ஹோஸ்டிங் தான்.//

பைடு - paid-ஆ?

Abu Khadijah said...

உங்கள் வருகைக்கு நன்றியம்ம, நீங்கள் இதற்கு முன் உள்ள கட்டுரையில் எளிமையாக கொடுக்க சொன்னதின் காரணம்தான், இந்த கட்டுரையில் ஹோஸ்டிங்கை வாடகை வீட்டோடு ஒப்பிட்டு எழுதியுள்ளேன்.

//VPS Hosting// - விரிவாக்கம் என்ன?

Virtual Private Server

//தமிழிஷ், தமிழ்மணம் சேருங்க. அப்பத்தான் நிறைய பேர் பார்வைக்கு வரும். பிறரின் பதிவுகளிலும் போய்ப் பாருங்க.//

தமிழிஷ்ல் பதிந்து 15 வோட்டுகள் பெற்று பாப்புலராகி விட்டது, தமிழ்மனத்தில் இனிமேல் தான் இனைக்க வேண்டும்


//ரெக்கமெண்ட் செய்வதெல்லாம் பைடு ஹோஸ்டிங் தான்.//
Paid, நன்றி...

ஹுஸைனம்மா said...

ஆமா, அதைச் சொல்ல மறந்துட்டேன், வாடகை வீடு உதாரணம் புரிஞ்சிக்க ரொம்ப வசதியா இருந்துச்சி. :-))

தமிழிஷ் ஓட்டுப் பட்டையைக் காணோமே?

Abu Khadijah said...

”http://www.tamilish.com/story/203589/” இந்த முகவரியில் போய் பாருங்களேன்.

ஹுஸைனம்மா said...

அங்க போய் ஓட்டுப் போட்டுட்டேன். ஆனாலும் வலைப் பதிவுல ஓட்டுப்பட்டையைக் காணோம். எப்படி cache க்ளியர் பண்றது?

அன்புத்தோழன் said...

எழிமையான எழுத்துநடையில், சிறப்பான விளக்கங்களுடன் நல்ல கற்பித்தலுக்கான முயற்சி.... நன்றியுடன் வாழ்த்துக்களும்...

Abu Khadijah said...

நன்றி ஹுசைனம்மா உங்களின் ஆதரவிற்கு,
நீங்கள் Mozilla Firefoxல் இருந்தால் Tools--->Clear Recent History சென்று கிளியர் செய்யவும்

நீங்கள் Internet Explorerல் இருந்தால் Tools--->Internet Options--> General Tabக்கு கீழ் Browsing History-->Delete என்ற பட்டனை கிளிக் செய்து கிளியர் செய்யவும்.

Abu Khadijah said...

நன்றி அன்புத்தோழா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

Sathya said...

வெப்டிசைநிங் செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் : https://www.youtube.com/watch?v=YtXOWFMd3Uw

Post a Comment

வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?