இணைய பக்கங்களை வடிவமைக்க வேண்டுமாயின், உங்களுக்கு சில மென்பொருளை பற்றி தெரிந்திருப்பது அவசியம், அவை என்னென்ன.
மென்பொருள்
மென்பொருள்
- Abobe Photosop
- Adobe Dreamweaver
- Adobe Flash
- HTML
- Javascript
- மேலே சொன்ன மென்பொருள் அனைத்தும் அனேகமானோருக்கு தெரிந்திருக்கலாம், அப்படி தெரியவில்லையெனில் கற்றுக்கொள்வது அவசியம். பொதுவாக Adobe Photoshop பற்றி சொல்ல வேண்டுமானால் இவை இணையபக்கங்களை வடிவமைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது இன்றைக்கு இந்த மென்பொருள் இல்லாமல் இணையதளத்தை அழகுப்படுத்த முடியாது என்றே சொல்லலாம்.
- Adobe Dreamweaver என்பது இனைய மென் ஒருங்கு(Web Application Software), இணையப்பக்கத்தை உருவாக்குவதற்காகவே சிறப்பம்சங்களோடு வடிவமைக்கப்பட்டதாகும், இந்த மென்பொருளை முதலில் Macromedia என்ற நிறுவனம் உருவாக்கியது, 2005 ஆம் ஆண்டு, Adobe என்ற நிறுவனம் இந்த மென்பொருளை பெற்று மேலும் மேம்படுத்திக் கொண்டிருக்கிறது.தற்போது இந்த நிறுவனம் CS3 யை வெளியிட்டிருக்கிறது.
- Adobe Flash பற்றி உங்களுகெல்லாம் தெரிந்திருக்கும், இன்றைக்கு இனைய உலகில் இதனுடைய பங்கு பெரும்பான்மையானது. இவைகளை கொண்டு கண்னை கவரும் அனிமேஷனை இனையப்பக்கத்திற்காக உருவாக்கலாம், மேலும் இவைகள் கல்வி நிறுவனங்கள் மற்றும் அனைத்து வகையான நிறுவனங்களில் பயிற்சி அளிப்பதற்காக CBT(Computer Based Training) என்ற முறையை இந்த மென்பொருளின் மூலம் உருவாக்குகிறார்கள்.
HTML
- HTML ன் விரிவாக்கம் Hyper Text Markup Language
- HTML என்பது ஒரு ப்ரோக்ராமிங் மொழி அல்ல , அது ஒரு குறியீட்டு மொழி
- குறியீட்டு மொழி என்பது ஒரு உள்ளடக்கத்தை எவ்வாறெல்லாம் டிஸ்பிலே செய்யலாம் என்பதை ஒரு வரைமுறைக்குட்பட்டு உருவக்க பட்ட மொழியாகும்.
- இவைகள்
tag கொண்டு உருவாக்க பட்டது - சரியான
tag கொண்டு கட்டளையிடுவதன் மூலம் வெளியீட்டை (Output) இனையப்பக்கத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
- யாவாசிகிரிப்டு என்பது வலைத்தளங்களை வடிவமைக்க பரவலாகப் பயன்படும் ஒரு கணினி நிரல் மொழி ஆகும். பயனர் பக்க செயற்பாடுகள் யாவாசிகிரிப்டினால் பெரிதும் நடைமுறைப் படுத்தப்படுகின்றன. 1995 ஆம் ஆண்டு நெற்சுகேப் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மொழிக்கு தற்போது மிகவும் விருத்தி பெற்ற மென்பொருள் கட்டமைப்புகள் உள்ளன. யேகுவெரி, மொடூல்சு, கூகிள் வலை கருவிப்பெட்டி போன்றவை பரவலான பயன்பாட்டில் இருக்கும் யாவாசிகிரிப்டு கட்டமைப்புகள். பெயரில் ஒத்த ஜாவா நிரல் மொழிக்கும் இதற்கு எந்த நேரடி தொடர்பும் இல்லை






























