Monday, January 26, 2009

21ம் நூற்றாண்டின் உபயோகமுள்ள உருப்படியான 10 கண்டுபிடிப்புகள் !


Assalamu Alaikkum.


1.ஜீனோம் சிப்

பரம்பரை நோய் முதல் கேன்சர் வரை கொடிய விளைவை ஏற்படுத்தும் மரபணுக்களை முன்கூட்டியே கண்டறிந்து, எந்தெந்த மரபணு அபாயகரமானது என்பதை மைக்ரோ வடிவில் `ஜீனோம் சிப்' மூலமாக தகவல்களைப் பதிவு செய்து தரும் அரிய கண்டுபிடிப்பு.2.பர்த் கன்ட்ரோல் பேட்ச்
கு.க. சிகிச்சை, ஆணுறை, கருத்தடை மாத்திரைகளை வெறுப்பவர்களுக்கான கண்டுபிடிப்பு. `செக்ஸ்'ஸின்போது பேட்ச் மட்டும் போதும். நோ பேபி. நோ டென்ஷன்.


3.சப் டைட்டில் ரீடிங் கிளாஸ்
வயர்லெஸ் ஹெட்செட் கருவி புத்தக வாக்கியங்களை, சம்பந்தப்பட்ட மொழியிலேயே படித்துக் காட்டும். வேற்றுமொழி படங்களைப் பார்க்க நேர்ந்தாலும் இந்தக் கண்ணாடி அணிந்திருப்பின் மொழி ஒரு பிரச்னை அல்ல.


4.அமெஸ் - 1
நீளமான அதேசமயம் உறுதியான, வளையக்கூடிய குழாய் போன்ற அமைப்புதான் இது. தீப்பிடித்த பதினோறாவது மாடியில் இருந்து லகுவாக சறுக்கிக்கொண்டே கீழே உங்களை பாதுகாப்பாக கரை சேர்க்கும் ஏணி.

5.போன் டூத்

ஒற்றைப் பல்லில் செல்போன் சங்கதிகள்.அழைப்பு வந்தால் காதிற்குள் ஹலோ குரல் கேட்கும். பேசவும், கேட்கவும் ஈஸியான வழி. வயர்லெஸ் கண்ட்ரோலும் உண்டு இந்தப் பல்லில்.
6.கிப்ஸ் அகுடா
நிலத்தில் சாதாரண காராகவும், நீருக்குள் புகுந்தால் சீறும் படகாகவும் அழகாகவே உருமாறும் உற்சாக வாகனம்.7.இன்டலிஜென்ட் ஓவன்ஸ்

ஃப்ரிட்ஜ் உடன் கூடிய மைக்ரோ ஓவன். ஃபிரிட்ஜுக்கு செல்போன், இன்டர்நெட் வழியே கமெண்ட் கொடுத்தால் ஓவனுக்கு உணவுப் பொருள் ஷிப்டாகிவிடும். சமையலும் ரெடி!
8.விர்சுவல் கீ போர்டு
லேசரை அடிப்படையாகக் கொண்டு தொடுதிரையாக வந்த இந்த கணினி கீ போர்டுக்கு அப்படியொரு வரவேற்பு. துல்லியமாகவும், எளிதில் பயன்படுத்தவும் முடிவதால் எப்போதும் இந்தக் கண்டுபிடிப்பு ஒரு சகபயணிதான்.

9.பயோனிக் கான்டாக்ட்ஸ்
கான்டாக்ட் லென்ஸ் மாதிரியான தோற்றம். அலுவலக வேலைகள், சந்திக்க வேண்டிய நபர், போகவேண்டிய இடம் என விஷுவலாக வரைபடம் முதற்கொண்டு கண்முன்னே தோன்றி ஞாபகப்படுத்துவதால், பிஸினஸ்மேன் ஆசாமிகளுக்கு இது கூடுதல் வசதி.
10.ஸ்மித் x
சிறப்பான தாள் ப்ளஸ் ஒரு மிஷின். இந்தப் பேப்பரில் இஷ்டப்படி எழுதிவிட்டு, பின் அந்தப் பேப்பரை இத்துடன் தரப்படும் மிஷினில் செலுத் தினால் எழுத்துக்கள் மட்டும் மறைந்து பேப்பர் புதிதாக திரும்பி வரும். எழுதிய பேப்பரை இனி கிழிக்க வேண்டாம்.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "21ம் நூற்றாண்டின் உபயோகமுள்ள உருப்படியான 10 கண்டுபிடிப்புகள் !"

Post a Comment

வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?