Friday, January 30, 2009

அவ்வப்போது ஆட்டுப் பாலையும் !

பொதுவாக நம் உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை அளிக்கவல்ல பல்வேறு சத்துப் பொருட்களைக் கொண்டது 'பசும்பால்'.
இதில் கால்சியம், இரும்பு, கொழுப்பு உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன என்பது அனைவரும் அறிந்ததே.

அதேநேரத்தில், பசும்பாலைக் காட்டிலும் ஆட்டுப் பால் மிகச் சிறந்தது என்று மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
காரணம், உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தும், எலும்பை உறுதியாக்கும் திறன் கொண்ட சத்துக்களும் பசும்பாலைக் காட்டிலும் மிகுதியான அளவில் ஆட்டுப்பாலில் இருப்பதாக அமெரிக்க மருத்துவ அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

எனவே, பசும்பாலைப் பருகும் அதேவேளையில், அவ்வப்போது ஆட்டுப் பாலையும் எடுத்துக்கொள்வது சாலச் சிறந்தது.


Abu Sumayyah

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "அவ்வப்போது ஆட்டுப் பாலையும் !"

Post a Comment

வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?