இதற்குமுன் உள்ள கட்டுரைகளில் வெப் ஹோஸ்டிங்,வெப்சைட் என்றால் என்ன என்பதை விரிவாக பார்த்தோம், இக்கட்டுரையில் வெப்சைட் செய்யும் முன் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான சில வழிமுறைகளை இங்கு நான் கொடுத்தால் உங்களுக்கு ஒரு நல்ல இனையத்தளத்தை உருவாக்க ஏதுவாக இருக்கும்.
பொதுவாக எந்த ஒரு செயல் செய்யும் முன் அதை பற்றிய திட்ட்ங்கள் இருந்தால் தானே அந்த செயல் முழுமையடைய இலகுவாக இருக்கும், அதே போன்றுதான் இங்கு சில வழிமுறைகளை வகுத்து அதன் படி ஒரு இணையதளத்தை வடிவமைத்தால்தான் வேகமாகவும், அனைவராலும் ஏற்றுக்கொள்ள கூடியவையாக அமைக்க முடியும் .
அதென்ன அந்த வழிமுறைகள்,இதோ:
- முதலில் எந்த நோக்கத்திற்காக இனையத்தளத்தை வடிவமைக்க போகிறீர்கள் என்பதை உறுதி செய்துக் கொள்ளுங்கள் [Try to find what is the focus point of the website? ]
- என்னென்ன தனித்தன்மையான அம்சங்கள் கொடுக்க நினைக்கிறீர்கள் என்பதை குறித்துக் கொள்ளுங்கள்[Try to Note that What are the unique features you are going to give?]
- என்னென்ன பிரிவுகள் கொடுக்க போகிறீர்களோ அதை பற்றி விரிவாக எழுதிக்கொள்ளுங்கள் [Describe the section that what is going to be in your website]
- என்னென்ன உள்ளடக்கம்(Content) இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.[Finalize the Content of the website]
- எந்த வகையான தோற்றம்[Style] வேண்டும் என்பதை இனையத்தின் வரையறைக்குட்பட்டு டிசைன் செய்ய வேண்டும் [Choose the style and appearance as per the Web Industry Standard]
- இனையத்தளத்தை வடிவமையுங்கள், பிறகு அதில் ஏதேனும் குறைகள் இருந்தால் நிவர்த்தி செய்யுங்கள் [Build a website and evaluate, if there is any mistake]
- இறுதியாக முன் பதிவில் சொன்னது போல் உங்களுக்கென ஒரு domain, Hosting பதிவு செய்து கொண்டு உங்களுடைய இனையப்பக்கங்களை வெளியிடுங்கள்[Register a domain and Hosting with Good company and Make your website Go live].
சரி மேலே சொன்ன வழிமுறைகளை கொஞ்சம் விரிவாக பார்த்தால் இன்னும் சிறப்பாக இருக்குமென்று கருதி உங்களுக்காக சமர்ப்பிக்கிறேன்
இனையத்தளத்தின் நோக்கம்[Focus point of the Website ] :
இதுவே முதலும் மிக முக்கியமாகவும் இருக்கிறது, ஒரு இனையத்தளத்தை வடிவமைக்குமுன் எந்த நோக்கத்திற்காக அதை வெளியிட போகிறீர்கள் என்பதை நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.என்னென்ன தேவை, எப்படி கையாளுவது, எந்த இடத்தில் உங்களுடைய தகவல்களை சேமிக்க வேண்டுமென்பதை ஒரு பட்டியல் போட்டு அதனை யாருக்கு நாம் டிசைன் செய்கிறமோ, அவர்களிடமும் ஒப்புதல் பெறுவதற்கான தகவல்கலை தயார் செய்ய வேண்டும்.
இனையத்தின் அம்சங்கள்
எப்படி செய்ய வேண்டுமென்பதை இதற்கு முன் பார்த்து விட்டோம், இருந்தாலும் குறிப்பாக என்னென்ன வகையான சிறப்பு அம்சங்கள் கொடுக்க வேண்டுமென்பதை முதலிலே தெரிந்திருக்க வேண்டும். உதாரணமாக ஆன்லைனில் பொருள் வாங்கும் வசதி, சேட்டிங் வசதி போன்ற அம்சங்களை நன்கு அறிந்து அதன் படி வடிவமைத்தால் வெற்றிகரமான இணையதளமாக உருவாக்கலாம்.
முக்கிய பிரிவுகளை விவரித்தல்
முதலில் சொன்ன இரண்டு வழிமுறைகளை முடித்து விட்டாலே, நீங்கள் ஏறக்குறைய வடிவமைத்து முடித்து விட்டீர்கள் என்று தான் அர்த்தம், இங்கே நீங்கள் முக்கியமாக ஒரு விஷயத்தை செய்தாக வேண்டும், ஒரு வீடுகட்டுமுன் எப்படியெல்லாம் இருக்கவேணுமென திட்டமிட்டு வரைந்து வைத்து அதன் படி கட்டுகின்றீர்களோ அது போல்தான் ஒரு இணையம் வடிவமைக்குமுன் அவைகளில் எந்தெந்த பிரிவுகள் எங்கெங்கே இருக்க போகிறது, எந்த hierarchy யில் [மண்ணிக்கவும் தமிழில் தெரியவில்லை] இருக்க வேண்டுமென்பதை ஒரு சாஃப்ட்வேர் கொண்டு வரைந்துக் கொண்டு பிறகு வெப்சைட் டெவலப் செய்யும் போது, புரிந்து கொண்டு எளிதில் முடிக்க வசதியாக இருக்கும்.
ஒப்புதல் பெறுவதற்காக உள்ளடக்கத்தை(content) தயார் செய்தல்
என்ஜினியர் வீடு கட்ட பிளான் போட்டு அதை அந்த வீடு முதலாளியிடம் காட்டி சம்மதம் பெற்றப்பின் வேலையை எப்படி ஆரம்பிகிராரோ அதுபோன்றுதான் மேலே சொன்ன அனைத்தையும் ஒரே ஆவணமாக தயார் செய்துக் கொண்டு , இந்த இனையத்தளம் உங்களுக்காக செய்தால் உங்களுக்கு நன்கு தெரிந்தவரிகளிடம் கான்பித்து அனைத்தும் சரியாக இருக்கின்றதா என்பதை உறுதி செய்து கொள்ளவும் அல்லது இந்த இனையத்தளம் பிற நிறுவனத்திற்கு செய்வீர்களானால் அந்த நிறுவனத்தில் ஒப்புதல் பெற்ற பின்பே ஆரம்பம் செய்ய வேண்டும்.
தோற்றமும் அதன் வரையறையும்
வீட்டை அதற்குண்டான கட்டட கலையுடன் கட்டினால்தானே பார்பதற்கு அழகாகவும் அனைவரும் ரசிக்கும் படி இருக்கும், அது போல் தான் ஓர் இணையதளத்தை உருவாக்கும் போது அதனுடைய முகப்பு பக்கத்திலிருந்து அதன் கடைசி பக்கம் வரை எவரேனும் பார்த்தல் சலிப்படையாதவாறு இருக்கும்படி பார்த்து கொள்ளவும். வரையறையை பற்றி ஒரு தனிகட்டுரையே எழுதலாம், சுருக்கமாக இங்கு பார்த்து விட்டு இனிவரும் கட்டுரையில் விளக்காமாக பார்க்கலாம், வரையறை என்பது ஒரு இணையதளம் இப்படிதான் இருக்க வேண்டும் என்ற சில விதிமுறைகள் இருக்கின்றன அதற்குட்பட்டு உருவாக்க வேண்டும்,
உதாரணமாக : microsoft கம்பெனிக்குன்டான இணையத்தையே எடுத்துகொள்வோம், நீங்கள் அந்த இணையத்தில் உபயோகிக்கும் கலர்களை நீங்கள் பார்க்கலாம், அதைதான் பொதுவாக வெப் இண்டஸ்ட்ரியில் கார்பரேட் கலர் என்று சொல்லுவார்கள், ஏனென்றால ஒவ்வொரு பகுதியிலும் எல்லா வகையான கார்பரேட் கலர்களையும் உபயோகித்து இருப்பார்கள், மற்றும் அதனுடைய Navigation(Links) Bread Crumb உபயோகித்து இருப்பார்கள், Color, Navigation போன்றவைகள் எல்லாம் Web Standard க்கு உட்பட்டது
Bread crumb என்றால் தற்போது நாம் எந்த பக்கத்தில் இருக்கிறோம் என்பதை காட்ட கூடியது
எ.க: About us--->Corporate Information, இங்கே நாம் கார்பரேட் பக்கத்தில் இருக்கோம் என்பதை சுட்டி காண்பிக்கிறது,
இனையத்தை தயார் செய்த பின் சரி பார்த்தல்
இப்பொழுது நாம் கடைசி ஸ்டெப்புக்கு வந்து விட்டோம், இனையத்தை தயார் செய்தாகிவிட்டது பிறகென்ன அவையனைதையும் ஒரு டொமைன் மற்றும் ஹோஸ்டிங் கணக்கு வாங்கியப் பின் FTP(File Transfer Protocol)சாஃப்ட்வேர் மூலம் எல்லா ஃபைல்களையும் அப்லோடு செய்ய வேடியது தான்.
Bread crumb என்றால் தற்போது நாம் எந்த பக்கத்தில் இருக்கிறோம் என்பதை காட்ட கூடியது
எ.க: About us--->Corporate Information, இங்கே நாம் கார்பரேட் பக்கத்தில் இருக்கோம் என்பதை சுட்டி காண்பிக்கிறது,
இனையத்தை தயார் செய்த பின் சரி பார்த்தல்
இப்பொழுது நாம் கடைசி ஸ்டெப்புக்கு வந்து விட்டோம், இனையத்தை தயார் செய்தாகிவிட்டது பிறகென்ன அவையனைதையும் ஒரு டொமைன் மற்றும் ஹோஸ்டிங் கணக்கு வாங்கியப் பின் FTP(File Transfer Protocol)சாஃப்ட்வேர் மூலம் எல்லா ஃபைல்களையும் அப்லோடு செய்ய வேடியது தான்.
7 comments: on "தெரிஞ்சிக்கலாமா? - 3"
Bread Crumb - முற்றிலும் புதிது
நன்றி.
நன்றி ஜமால் காக்கா..
தாங்கள் கட்டுரையை படித்தபிறகு தனியொரு வெப்சைட் செய்தால் என்ன என்று தோன்றுகிறது, இதற்காக யாரிடமும் உதவி கேட்க தேவையில்லை.
நல்ல பகிர்வு மன்சூர்
தங்களின் கருத்து என்னை மேலும் சிறப்பாக எழுத தூண்டுகிறது சகோ அபூஅஃப்ஸர் அவர்களே, அப்போ சீக்கிரம் வெப்சைட் டிசைன் பன்ன ஆரம்பிச்சுடுங்க, அதனை சிறப்பாக முடிக்க என்னால் முடிந்த அளவு பங்களிப்பை அளிக்க தயாராக உள்ளேன்.
நான் பல நாட்களக தேடிக்கொண்டிருந்த விடயம்.............
மகிழ்ச்சி உங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள்..............
வாங்க செல்லத்துரை, நன்றி உங்கள் முதல் வருகைக்கு, தொடர்ந்து வாருங்கள்
வெப்டிசைநிங் செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் : https://www.youtube.com/watch?v=YtXOWFMd3Uw
Post a Comment
வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?