Wednesday, March 10, 2010

தெரிஞ்சிக்கலாமா?

சரி தலைப்பை யோசிச்சாச்சு, அப்புறம் எதை பற்றி சொல்லலாம்னு யோசிச்சப்போத்தான்  வெப்டிசைன பற்றி எனக்கு தெரிஞ்சத ஏன் போடக்கூடாதுன்னு தோனுச்சு,

வெபடிசைன்  பற்றி எழுதுவதின் நோக்கம்  எத்தனை (பிளாக்குகள்) blogger,wordpress,yolasite என்று வந்தாலும், சொந்தமாகவும் நம்முடைய டேஸ்டுக்கு தகுந்தவாறு டிசைன் செய்த பிறகு அதை இண்டர்நெட்டில் பார்க்கும்போது கிடைக்கும் திருப்தியே தனி தாங்க.  நீங்கள் நினைக்கலாம் வலைப்பூ டிசைனுக்காகவே  நிறைய தளங்கள் இருக்கிறதென்று, எவ்வளவுத்தான் இருந்தாலும்  நீங்கள் நினைத்தாவாறு அந்த உள் கட்டமைப்பை உங்களுக்கேற்றவாறு  மாற்றிக் கொள்ள முடியாதது என்பதுதான் உன்மை. ஆக நாம் வெப் டிசைனின் முக்கியத்துவத்தை  தெரிந்து அதன் படி வடிவமைக்க கற்றுக்கொண்டால் நீங்கள் இதை வைத்து உங்களுக்காவும் டிசைன் செய்துக்கொள்ளலாம், பிறருக்கு டிசைன் செய்து சம்பாரிக்கவும் செய்யலாம்.

சரி நாம் எதை பற்றியெல்லாம் இனிவரும் தொடரில் பார்க்கபோறோம் :
  • (World Wide Web) வேர்ல்டு வொய்டு வெப் என்றால் என்ன?
  • வெப்சைட் என்றால் என்ன?
  • வெப் ஹோஸ்டிங் என்றால் என்ன?
  • அதற்கு என்னனென்ன தேவை, 
  • எப்படி செய்வது
  • செய்து முடித்த பின், அதனை கொண்டு எப்படி பணம் ஈட்டுவது? .
  •  
(World Wide Web) வேர்ல்டு வொய்டு வெப் என்றால் என்ன?

வேர்ல்டு வொய்டு வெப் என்பது உலகிலுள்ள அனைத்து கணினிகளின் தகவல் மற்றும் பிற ஆவணங்களை ஒன்றினைக்க கூடியதுதான், world wide web எனலாம்.

இவை HTTP (Hyper Text Transfer Protocol)என்ற வரைமுறைக்கு   உட்பட்டு தகவல்கலை பரிமாறிக் கொள்கின்றன.மேலும்  நாம் அனைத்து ஆவனங்களையும் பிரவுசர்களின் மூலம் பெற்று கொள்வதைத்தான் நாம் வெப்பேஜ்(Web page) என்கிறோம்.

வெப்சைட் என்றால் என்ன?
வெப்சைட் என்பது அணைத்து வகையான ஊடகங்கள் உள்ளடக்கிய தொகுப்பு எனலாம், அவைகளில் சில: எழுத்து,வீடியோ,போட்டோ, போட்டோ கேலரி மற்றும் இவையனைத்தையும் ஆன்லைனில் வேர்ல்ட் வொயிடு வெப் வாயிலாக பெற்றுக்கொள்கிறோம், பொதுவாக இவைகளை நான்கு வகைகளாக பிரிக்கலாம்
  • தனக்குரிய இணையதளம் (personal website )
  • வணிகம் சம்பந்தமான இணையதளம் (commercial website  )
  • அரசு சம்பந்தமான இணையதளம் (Goverment websites )
  • லாபமற்ற இணையதளம் (non   profit website)
இன்னும் நிறைய வகைகயான இணையதளங்கள் இருந்தாலும் மேல் சொல்லப்பட்டவைதான் அதிகமாக மக்களால் பயன்படுத்தபடுகிறது.


மேல் சொல்லப்பட்ட இணையதள வகைகளை  இரண்டாக பிரிக்கலாம:
  •  நிலையியல் இணையதளம் (Static Website)
  • பலவகை இயக்கமுள்ள இணையதளம் (Dynamic website)
நிலையியல் இணையதளம் (Static Website) :

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், எந்த ஒரு இனையப்பக்கம்  டேட்டபேசோடு (தகவல்தளத்தோடு) இனைத்து செயல்பட வில்லையோ அல்லது எந்த ஒரு இனையப்பக்கத்தில் தகவல்கலை மாற்ற பட முடிய வில்லையோ, அதுவே நிலையியல் இணையதளம்(Static Website).

உதாரனமாக சொல்லப்போனால் எந்த ஒரு இனையப்பக்கம்  .htm,html என்று முடிகிறதோ.
Eg : index.html, index.htm

டைனமிக் இனையதளம்:

இவை ஸ்டேடிக் இனையதளத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டவை, எப்படியெனில் இது டேட்டபேசோடு (தகவல்களை சேமிக்கபடும் இடம்) இனைக்கப்பட்டு தகவல்களை பறிமாற்றிக் கொள்ளும். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் இனையப்பக்கத்தில் எந்த ஒரு தகவலை சுலபமாக பறிமாறிக் கொள்ள முடியுமோ, அதுவே டைனமிக் இனையத்தளம் எனலாம்.

உதாரணமாக சொல்ல வேண்டுமானால் நாம் தினமும் பறிமாறிக் கொள்ளும் (Blogger)வலைப்பூவையே சொல்லலாம். இவைகளில் நீங்கள் தகவல்களை Blogger control panel மூலமாக போஸ்ட் செய்தவுடன் அடுத்த வினாடியே அதனுடைய output உங்களின் முதலில் பக்கத்தில் தெரிகிறதல்லவா?

டைனமிக் இனையத்தளம்  P.H.P(Hyper Text Preprocessor), ASP, ASP.NET, RUBY and RAILS போன்ற பிரோகிராமிங் லாங்க்வேஜ் மூலம் டைனமிக் இனையத்தளம் வடிவமைக்கலாம்.

வெப் ஹோஸ்டிங் என்றால் என்ன?
சரி இணையதளத்தை பற்றி பார்த்தாச்சு,  வடிவமைத்த பிறகு இணையதளத்தை எப்படி, எங்கே பார்க்கிறது? என்று கேள்வி எழலாம், ஆம் குறைந்த விலையில இடம் தருவதற்காகவே இன்றைக்கு உலகில் நிறைய இணையதளங்கள் உள்ளன, குறிப்பாக godaddy.com (இந்த தளம் எனக்கு பிடித்ததனால் குறிப்பிட்டிருக்கிறேன்). 
உங்களுகென்று குறிப்பிட்ட அளவு இடம்(space) வாங்கியபிறகு FTP(File Transfer Protocol)
மூலமாக அப்லோடு செய்யலாம். இவையனைத்தும் எப்படி செய்யலாமேன்பதை பின் வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

உங்களின் கருத்து மற்றும் கேள்விகளை பொறுத்தே இனிவரும் பதிவுகளை இன்னும்  சிறப்பாக கொடுக்க முடியும்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

7 comments: on "தெரிஞ்சிக்கலாமா?"

ஹுஸைனம்மா said...

நீங்க எடுத்துகிட்ட விஷயம் சிறப்பு. ஆனா இன்னும் கொஞ்சம் எளிமையா விளக்க முடிஞ்சா என்னப்போல அதிகம் படிக்காதவங்களுக்கும் கொஞ்சம் புரியும். :-))

Abu Khadijah said...

//நீங்க எடுத்துகிட்ட விஷயம் சிறப்பு. ஆனா இன்னும் கொஞ்சம் எளிமையா விளக்க முடிஞ்சா என்னப்போல அதிகம் படிக்காதவங்களுக்கும் கொஞ்சம் புரியும். :-))//

நன்றி ஹுசைனம்மா உங்கள் கருத்துக்கு, நிச்சயமா கொடுத்துடலாம்
மேலே சொன்னதில் எந்த இடத்தில் புரியவில்லையென சொன்னால், கொஞ்சம் நான் என்னை improve செய்துக் கொள்வேன்.

//என்னப்போல அதிகம் படிக்காதவங்களுக்கும் கொஞ்சம் புரியும்.//

என்ன ஒரு தன்னடக்கம்...

அப்துல்மாலிக் said...

நல்ல பதிவு தொடருங்கள்

Abu Khadijah said...

நன்றி அபுஅஃப்ஸர் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

SUFFIX said...

சாரி மன்ஸூர், ரொம்ப பிசி அதான் வலைப்பக்கம் வரமுடியல, இப்போதான் டைம் கிடைச்சது, நல்ல தொடக்கம், உபயோகமான தகவல்கள், நண்பர்கள் கருத்துக்களையும் ஏற்று, தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

Abu Khadijah said...

அப்படியா, எனக்கு ரொம்ப நாள் யோசனையாகவே இருந்தது,என்ன ஆளையே காணோமென்று, நீங்கள் நீண்ட நாட்கள் வரவில்லையெனில், ஏதோ ஒன்று குறைந்தது போல் தோன்றும்.

Sathya said...

வெப்டிசைநிங் செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் : https://www.youtube.com/watch?v=YtXOWFMd3Uw

Post a Comment

வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?