Thursday, March 25, 2010

தங்கை பெற்ற தங்க பதக்கம்

சென்ற 22-03-2010 ஞாயிறன்று திருச்சி ஐமான் கலை அறிவியல் பெண்கள் கல்லூரியின் ஏழாமாண்டு பட்டமளிப்பு விழா சிறப்புற நடைபெற்றது. தம் அருமைப் பெண் செல்வங்களின் கல்வி முன்னேற்றத்தை விழாக் கோலத்தில் கண்டு மகிழ ஏராளமான பெற்றொர் மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்து வந்து ஐமான் கல்லூரி வளாகத்தில் குழுமியிருந்தனர்.

மாலை சுமார் நான்கு மணியளவில் பட்டமளிப்பு விழா, முஸ்லிம் லீக் தலைவர் பேரா. கே. எம். காதர் முகைதீன் அவர்களின் முன்னிலையில் தொடங்கிற்று. வழக்கமான தொடக்க நிகழ்வுகளுக்குப் பின்னர், பட்டமளிப்பு நிகழ்ச்சி தொடங்கிற்று.

அதில் முதலாவதாகப் பட்டத்தைப் பெற்று மகிழ்ந்தவர், ஜித்தாவில் ஐ.பி.எம். நிறுவனத்தில் பணியாற்றும் ஹாஜி அ.மு.க. முகமது அமீன் அவர்களின் செல்வப் புதல்வியான சித்தீகா என்ற மவ்ஜூதா ஆவார்.

இச்செலவப் புதல்வின் தெரிவுப் பாடம், Nutrition & Dietetics என்பதாகும். இப்பாடப் பிரிவில், செல்வி மவ்ஜூதா மாநிலத்திலேயே முதலாவது மாணவியாக (Bharathidasan University Gold Medalist) ஏற்றம் பெற்றிருந்தார்! அதைக் கண்ட அதிரைவாசிகளின் அகமகிழ்வுக்கு அளவேயில்லை! அடுத்த நாள் நிகழ்ந்த பாராட்டு விழாவில் நம் சித்தீகாவுக்குச் சிறப்புப் பரிசில்களும் கணிசமான பணப்பரிசும் வழங்கப்பட்டன. கல்வி உயர்நிலையும் பாராட்டும் பரிசில்களும் பெற்றுத் தன் பெற்றோர்களையும் உற்றார் உறவினர்களையும் ஊர்வாசிகளையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய அன்புச் செல்வி சித்தீகா, நம் அனைவரின் மனமார்ந்த பாராட்டிற்குரியவர் ஆகின்றார். எதிர்காலத்தில் இன்னும் பல சிறப்புகளைப் பெற்று, இம்மை-மறுமை வாழ்வில் வெற்றியடைய, செல்வி சித்தீகாவை மனமார வாழ்த்துகின்றோம்!

தகவல்: அதிரை அஹமத்

அத்தங்கையை மென்மேலும் வளர வாழ்த்தும்  மன்சூர்(நான்) மற்றும் குடும்பத்தார்கள்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

16 comments: on "தங்கை பெற்ற தங்க பதக்கம்"

ஹுஸைனம்மா said...

உங்க தங்கையா? வாழ்த்துகள்.

Abu Khadijah said...

வாங்க ஹுசைனம்மா, வருகைக்கு நன்றி, என் கூட பிறந்த தங்கையல்ல. அவர்கள் எங்கள் வீட்டு சொந்தகாரர்கள்.

அன்புத்தோழன் said...
This comment has been removed by the author.
அன்புத்தோழன் said...

Thanks for all your wishes and prayers..... Now am feeling like shouting with hands wide open that

"Am the happiest man in the worlddddd......"

Alhamdhulillah....

All praise to Allah that He blessed me lot of good things in life...... The one for which i always wanna be thankful to him is "Sidhika".... My love.....

Please pray for our successful married life ahead insha Allah....

Thanks for all once again

அன்புத்தோழன் said...

Thanks very much for posting this... But please make sure that you correct Sidhika's Dad's Name on it... Its not Ahamed Ameen, its Mohammed Ameen.... Guess u didn't noticed that....

Thanks bro...

Abu Khadijah said...

மண்ணிக்கவும், தந்தையின் பெயரை நான் கவணிக்கவில்லை, மாற்றி விடுகிறேன்.
நன்றி உங்கள் வருகைக்கு

M.A.K said...

அல்ஹம்துலில்லாஹ், இந்த பதிவிற்காக சித்திக்காவின் உடன்பிறந்த சகோதரனாகிய நான் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்!

Abu Khadijah said...

வாங்க MAK ரொம்ப நாளைக்கு பிறகு வந்திருக்கிறீர்கள், உங்களின் நீண்டா நாட்களுக்கு பின் வருகை எனக்கு மிகுந்த சந்தொஷத்தை அளிக்கிறது

mkr said...

good news.vaazththukaL

Abu Khadijah said...

வாங்க mkr, என்ன ஆளயே கானோம், அத்தி பூத்தாற்போல் வந்து செல்லுகிறீர்கள். அடிக்கடி வந்து கொஞ்சம் பார்த்துட்டு போங்க

அப்துல்மாலிக் said...

வாழ்த்துக்கள் அந்த சகோ மற்றும் அதற்காக உதவியவர்களுக்கு.

திருமணம் என்ற பந்தத்தினால் எதிர்கால வாழ்க்கை கட்டுக்குளில்லாமல் மணமுடித்தாலும் இவர்களின் சேவை நிச்சயம் தேவை நாட்டுக்கு

Bashin Beach said...

Valvil ella valangalaium petru, Ivvulahilum Maru Ulahilum menmaipera manamara valthuhiren.

Abu Khadijah said...

வாங்க beauty, உங்கள் வாழ்த்துக்களை அவர்களிடம் எத்தி வைத்திடுலாம்., வருகைக்கு நன்றி சகோதரி / சகோதர

அன்புடன் மலிக்கா said...

எல்லாபுகழும் இறைவன் ஒருவனுக்கே! அல்ஹம்துலில்லாஹ்.
தங்கையிடம் வாழ்த்துக்களை தெரிவித்துவிடுங்கள். இன்னும் முன்னேற இறைவன் துணைசெய்வான்

mkr said...

உங்களுடைய எல்லா அப்டேட்யும் பார்த்து வருகிறேன்.சில நாட்களாக இணையம் ரொம்ப மெதுவாக இயங்குவதால் பின்னூட்டம் இட முடியவில்லை.

SUFFIX said...

மாஷா அல்லாஹ், மப்ரூக். மகிழ்ச்சியான செய்தி, பகிர்ந்தமைக்கு நன்றி மன்சூர்.

Post a Comment

வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?