மருந்தில்லாமல் கட்டுப்படுத்தக்கூடிய நோய்களின் பட்டியலில் ரத்தக்கொதிப்பும் இடம் பெறுகிறது. தேசிய கூட்டு குழு 6-வது பரிந்துரையின்படி மருந்துகள் அல்லாத சிகிச்சை முறைகளான வாழ்க்கை நடைமுறை மாற்றங்கள் எல்லாவிதமான உயர் ரத்தஅழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது.
1. சீரான உடற்பயிற்சியுடன் பொருந்தக்கூடிய உணவுக்கட்டுப்பாடு அதிக உடல்எடை (ஜ்கநிறிறு) குறைய ரத்தஅழுத்தமும் இயல்பான நிலைக்கு திரும்பும். ரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.
2. உணவில் உட்கொள்ளும் சோடியம் குளோரைடு உப்பை குறைத்து உண்பதால் ரத்தக்கொதிப்பு சீர்படும். உப்பு அதிகம் உள்ள உணவுப்பொருட் களை (ஊறுகாய், அப்பளம், வடகம்;, விதைகள், சிப்ஸ், டப்பாவில் அடைக்கப்பட்ட மீன்கள் மற்றும் வெண்ணெய், சாஸ்) தவிர்க்க வேண்டும்.
3. துரித உணவகங்களில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சுமார் 4-லிருந்து 6 கிராம் உப்பு தினமும் உட்கொள்வது நலம்.
4. நல்ல உடல்உழைப்பும், உடற்பயிற்சியும் இதய மற்றும் ரத்தநாளங்களில் மாறுதல்கள் ஏற்படுத்தி ரத்த அழுத்தத்தை சீர்படுத்தும். ரத்தகொதிப்பு உள்ளவர்கள் பளுதூக்கும் உடற் பயிற்சிகளை மேற்கொள்ள கூடாது. வேகமாக நடத்தல், மெல்லோட்டம், சைக்கிள்ஓட்டுதல், நீந்துதல் போன்றவை உபயோகமானவை. குறிப்பாக ரத்தக் கொதிப்பு நோயாளிகள் தினமும் காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் 30 நிமிடங்கள் வாரத்துக்கு 5 நாட்கள் வேகமாக நடப்பது மிகவும் பயன் தரக்கூடியது.
5. ரத்தக்கொதிப்பு அதிக மது அருந்தும்போது அதற்கேற்றாற் போல் அதிகரிக்கிறது. மது அருந்துவதால் இதயரத்த நாளங்களில் கொழுப்பு படிவதும் இதயதுடிப்பில் மாறுதல் ஏற்படுவதும், உடல் எடை கூடுவதும், ரத்த அழுத்தத்தை சீர்படுத்த பயன்படாதவை. எனவே மது அருந்துபவர்கள் அதனை தவிர்க்க வேண்டும்.
6. ரத்தகொதிப்பில் புகைபிடிப்பது அறவே நிறுத்தப்பட வேண்டும். சிகரெட்டு புகைப்பதனால் இதயதாக்கு ஏற்படும் அபாயம் 3-லிருந்து 5 மடங்கு அதிகமாக உயர்கிறது. புகைப்பதினால் ரத்தஅழுத்தம் அதிகரிக்கிறது.
நிக்கோட்டின் ரத்தம் உறைதல் தன்மையை அதிகரிக்கிறது. ரத்தபாகுநிலை அதிகரித்து தட்டணுக்கள் உடையும் தன்மை அதிகமாகி இதயதாக்கு மற்றும் மூளைதாக்கு போன்றவை ஏற்பட வழிவகுப்பதால் ரத்த கொதிப்பு உள்ளவர்கள் புகை பிடித்தலை சுத்தமாக நிறுத்தப்படவேண்டும்.
7. பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் போன்றவை அதிகமாக உள்ள பச்சை காய்கறி, கீரைவகைகள், பழவகைகள் உண்பது ரத்தக்கொதிப்பில் மிகவும் பலன் அளிக்கும்.
8. உணவை திட்டமிட்டு கொடுப்பதை குறைத்து நார்சத்து, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவு வகைகள் ரத்தகொதிப்புக்கு மிக அவசியம்.
0 comments: on "ரத்தக்கொதிப்பை குணப்படுத்த கீழ்கண்ட 8 வழி முறைகளை பின்பற்றி பயனடையுங்கள்:"
Post a Comment
வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?