சிறுநீரகக் கற்களில் பல வகைக் கற்கள் உண்டு. அதாவது கால்சியம் கற் கள், ஆக்சலேட் கற்கள், யூரிக் அமிலக் கற்கள், சிஸ்டின் கற்கள், கலப்புக் கற்கள்.
கற்கள் சிறியதாக இருக்கும்போது எந்தவித தொந்தரவுகளும் இருக்காது. பெரியதாக ஆனபிறகு முதுகிலுள்ள விலா எலும்புகள் முடியும் இடத்தில் வலி தோன்ற ஆரம்பிக்கும். வண்டியில் செல்லும் போதோ மாடிப்படிகளில் ஏறும்போதோ இந்த வலியை அதிகமாக உணரலாம்.
கற்கள் இருந்தால் அதன் அறிகுறிகள் இப்படியிருக்கும்
வயிற்றுவலி, இடுப்பு வலி, சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியேறும் சம யத்தில் சாதாரண வலி, வாயுக் கோளாறு, சதைப் பிடிப்பு என நினைத்து ஏதாவது மருந்தை சாப்பிட்டு வலியை குறைத்துக் கொள்வார்கள். ஆனால் இந்த வலி ஏற்பட்ட பின் ரத்தம் கலந்து சிறுநீரில் வெளியேறினால் நிச்சயம் கற்களாக இருக்க வாய்ப்பு உண்டு. இப்படி உருவாகும் கற்கள் சிறுநீரகத்திலிருந்து சிறுநீர் குழாயை அடைகின்றன. சிறுநீர் குழாயை அடைக்கும்போது வலி மிகவும் தாங்க முடியாததாக இருக்கும்.
பிறப்புறுப்பு, உள்ளங்கால்கள் வரை வலி ஊடுருவிச் செல்லும்போது தாங்க முடியாததாக இருக்கும்.
பெரும்பாலான நோயாளிகள் ஆரம்ப நிலையிலேயே பரிசோதனைகள் செய்துகொள்ள முன்வருவதில்லை. நோயின் கொடூரம் தாங்க முடியாமல் இருக்கும்போது எக்ஸ்-ரே, ஸ்கேன், எடுத்து பார்க்கும்போது கற்கள் இருப்பது தெரியும். கற்களை நீக்க உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம்.
கால்சியக் கற்கள் உள்ளவர்கள் சுண்ணாம்புச்சத்து அதிகமுள்ள உணவைத் தவிர்க்க வேண்டும். முட்டை, மீன், மாமிச வகைகள், பால் போன்றவற்றை சாப்பிடக்கூடாது.
ஆக்சலேட் கற்கள் உடையவர்கள் பீன்ஸ், முட்டைகோஸ், கீரை வகைகளை தவிர்க்கவேண்டும்.
யூரிக் அமிலக்கற்கள் உடையவர்கள் பீன்ஸ், அவரை, பட்டாணி, சுண்டல், முருங்கை போன்றவற்றை தவிர்க்க வேண்டும். பொதுவாக எந்த வகை கற்களாக இருந்தாலும் மது அருந்து வதை நிறுத்த வேண்டும். இதனால் கல்லீரல் பாதிப்பும் உண்டாகும்.
தவிர்க்க வேண்டியவை
சிறுநீரகக் கல்நோய் வராமல் தடுக்க உணவில் சுண்ணாம்புச்சத்து அதிகம் கொண்ட தக்காளி, கோஸ், வேர்க்கடலை, காலிப்பிளவர், பால் போன் றவைகளை தவிர்க்க வேண்டும். மாமிச உணவுகள் குறிப்பாக முட்டை, நண்டு ஆகியவற்றையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
சேர்க்க வேண்டியவை
வாழைத்தண்டு, கீரைத்தண்டு, முள்ளங்கி, வெண்டைக்காய், பசலைக் கீரை, சிறுகீரை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். சீரகம் கலந்த நீரை அடிக்கடி குடிப்பது நல்லது.
சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற உணர்வு தோன்றினால் உடனடியாகக் கழித்துவிட வேண்டும். அடக்கி வைத்துக் கொண்டிருப்பது நாளடைவில் கற்களை உண்டாக்கும்.
இதற்கு சித்த மருத்துவத்தில் கஷாயங்கள், மூலிகை மருந்துகள் நிறைய உள்ளன. எந்த வகைக் கற்கள் என்பதைப் பற்றி ஆராய்ந்து அதற்கு ஏற்ப சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். மருத்துவரின் ஆலோசனையைப் பின் பற்றினால் பிரச்சினைகளை விரைவாகத் தீர்க்கலாம்.
1 comments: on "சிறுநீரகக் கற்கள்"
பயனுள்ள பதிவு:
வாழ்த்துக்கள்
www.eegarai.co.cc
Post a Comment
வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?