சென்னை : உலக வங்கி தொடர்பான ஆவணங்களைக் கடத்தியதாக சைபர் குற்றத்தில் சிக்கிய
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்திற்கு உலக வங்கி, 8 ஆண்டுகள் தடைவிதித்துள்ளது.
இதனால், இந்தியாவில் பிபிஓ தொழில் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து செயல்படும் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம், கடந்த வாரம்
மைத்தாஸ் கட்டுமான நிறுவன இணைப்பு தொடர்பாக செபி அமைப்பின் கண்டனத்திற்கு
ஆளானது. இதனால், அதன் பங்கு மதிப்பு 35 சதவிகிதம் அளவிற்கு குறைந்தது.
இந்நிலையில், இந்நிறுவனம் மிகப்பெரிய சைபர் மோசடியில் சிக்கி, உலக வங்கியிடம்
அதன் மதிப்பை இழந்துள்ளது. உலக வங்கியின் கம்ப்யூட்டர் செயல்பாடுகளைக் சத்யம்
நிறுவனம் கவனித்து வருகிறது, இந்நிலையில், சத்யம் நிறுவனத்தில் பணிபுரியும்
சிலர், உலக வங்கியின் தகவல்களை கடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சைபர் மோசடி
தொடர்பாக அமெரிக்க உளவு நிறுவனமான எஃப்.பி.ஐ. விசாரணை செய்ததில், சத்யம்
நிறுவனம் சைபர் மோசடியில் ஈடுபட்டது உண்மை என்பது கடந்த ஜனவரி மாதம்
கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், 8 ஆண்டுகளுக்கு இந்நிறுவனத்தை உலக வங்கி தடை
செய்தது. இந்த தகவல், தற்போது வெளிவந்துள்ளதை அடுத்து, சத்யம் நிறுவனத்தின்
பங்கு மதிப்பு 16 சதவிகிதம் அளவிற்கு குறைந்தது. இதன் மூலம், அவுட்சோர்சிங்
பணியை மேற்கொள்ளும் இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம்
உருவாகியுள்ளது. இதனிடையே, இதன்காரணமாக, சத்யம் நிறுவனத்தின் தலைவர் ராமலிங்க
ராஜு, அந்த பதவியில் இருந்து விலகிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
source : -http://www.kumudam.com/latest_news.php?type=latestnews&id=1465#1465
0 comments: on "சத்யம் கம்யூட்டர்ஸ் மோசடி"
Post a Comment
வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?